பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் C 161 பதறி அடித்து ஓடி வந்தான் மாதவன். அவன் நெஞ்சு. பதைபதைத்தது. "ஐயோ பாவம்........நான் ஒரு பாவி.... என்னால் தான் இந்தத் துயரம் என்று அவன் உள்ளம் துடித்தது. மாதவன் அந்தப் பையனைத் துக்கி எடுத்து, அன்புடன் உபசரித்தான். பக்கத்துக் கடையில் சோடா வாங்கி அவனுக்கு அளித்தான். "ஸ்ார்.ஸ்ார். ரொட்டி’ என்று சனகரத்தில் கெஞ்சினான் அருணாசலம். மாதவனின் நெஞ்சமே அவனைக் கட்டது. ‘சரி, வா...... மெதுவாக வா...... கடைக்குப் போவோம்: என்று கூறி அவனை அழைத்துச் சென்றான் மாதவன். கடைக்காரனிடம் பதினைந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு, "மீதியை இன்னும் இரண்டு நாட்களில் தந்து விடுகிறேன்’ என்றான். அதுக்கென்ன ஸார்!’ என்று குழைந்து, பல்லிளித்தான் கடைக்காரன். ‘இவனுக்கு ஒரு ரொட்டி கொடுங்க......இனி வழக்கம் ப்ோல் தினமும் கொடுங்க' என்று மாதவன் சொன்னான். ரொட்டியைப் பெற்றுக் கொண்ட அருணாசலம் மிக்க நன்றி உணர்வோடு கையெடுத்துக் கும்பிட்டான். மனவேதனையோடு நடந்தான் மாதவன். 'கொடுத்துப் பழகியவனுக்கு அதுவே ஒரு பலவீனமாகி விடுகிறது........சடையப்ப வள்ளலைப் பற்றி ஒரு கதை உண்டு அல்லவா? கொடுப்பதற்கு அவரிடம் பொருள் இல்லாமல் போய் விட்டதாம். உதவிகோரி வந்தவனுக்கு இல்லை என்று சொல்ல முடியாமல், அவர் தன் உயிரையே