பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 C வல்லிக்கண்ணன் ஒகோன்னு ஒண்னுமில்லே. ஒரு மாதிரியா ரோல் ஆகுதுன்னு: சொல்லனும் ஆட்டைத் துரக்கிக் குட்டியிலே போட்டு, குட்டியை எடுத்து ஆட்டிலே போட்டு என்னென்ன உருட்டுப் புரட்டுகள் எல்லாமோ பண்ணி, வாழ்க்கையை ஒருதினுசா ஒட்டுறேன்னு சொல்லனும், ஊம்; பெரும் பகுதியை ஒட்டியாச்சி. இன்னும் எத்தனை காலம் இருந்து விடப் போறேன்! இப்பவோ பின்னையோ, இன்னும் சித்தெ தேசத்திலோ, எப்போ எமன் வந்தாலும் ஐயாவாள் ரேடி: எவரெடி-க்விக் மார்ச்னு தயாராக இருக்கேன்’ என்று. சொன்ன நாராயணன் உரக்கச் சிரித்தான். சுந்தரம், பில் பணத்தைக் கொடுக்கத் தயாரானதும், தாராயணன் சண்டை போடுவதுபோல் பாய்ந்து, பில்லை உதித்துக் கொண்டு, உரிய பணத்தை அவனே கொடுத்தான். இது நல்லாயிராது. பிரதர், தான்தான் உம்மை அடையாளம் தெரிந்து, வலியிலந்து நட்பு கொண்டாடி னேன். விசேஷமான விருந்து தேவை என்றேன். நான் பணம் கொடுப்பதுதான் முறை, ஒழுங்கு, நியாயம் எல்லாம். இல்லேன்னு சொன்னா, நான் டி.பனுக்கு அலந்துபோய் உம்மை தூண்டி விட்டதாக ஆகிவிடும் என்று லெக்சரடித் தான். இருவரும் மறுபடியும் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தபோது, தங்களுக்குத் தேரிந்தவர்களின் திருமண வாழ்க்கையைக் குறித்து பேசினார்கள்: ஒன்றிருவர் குடும்ப வாழ்வில் நிறைவும், சந்தோஷமும் அனுபவித்துக் கொண் டிருந்தார்கள். பலபேர்களது இல்லறவாழ்வு சராசரித்தன. மாகத்தான் இருந்தது. பிள்ளைகள், பிடுங்கல்கள், செலவுகள், சச்சரவுகள், பணம் பற்றாக்குறை, ஊடல்கள்கூடல்கள் என்று. சிலர் அளவு மீறிக் கடன் வாங்கி, வெளிச்சம் போட்டு மற்றவர்களை ஏமாற்றுவதோடு, தாங்களும் ஏமாந்து கொண்டிருந்தார்கள். சிலபேருக்கு மனைவி இறந்துபோனாள்; அல்லது மனபேதம் காரணமாகப்