பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; வல்லிக்கண்ணன் எதிர்காலத்தில் நாராயணன் ஒரு ஆராச்சியாளனாக வருவான் என்று சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். நாவல்கள் படைக்கக் கூடிய எழுத்தாளன் ஆவான் என்று ஒன்றிரண்டு பேர் சொன்னார்கள். எப்படியோ அவன் வாழ்க்கை ஒளி மயமாக விளங்கும் என்று அனைவரும் நம்பினார்கள். எல்லோரும் எதிர்பார்த்தபடி நாராயணன் ஒளி நிறைந்த எதிர்காலத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிய வில்லையே! அவன் வாழ்க்கை டிம் அடிச்சித்தான் காணப். படுகிறது என்று சுந்தரம் கருதினார். . . . இருந்தாலும், வறட்சிநிலை இல்லையென்று தெரிகிறது. பனப்புழக்கம் இருக்கும் என்றே தோனு:து. ஒட்டலுக்கு அழைத்துப் போய் விருந்து உபசாரம் செய்யத் தயங்க வில்லையே அவன். பின்னே என்ன!-சுந்தரம் திருப்திப் பட்டுக் கொண்டார். . ベ > அவர் போக வேண்டிய இடத்துக்குப் போய், முடிக்க வேண்டிய அலுவலை முடித்துவிட்டு, பஸ் நிலையத்துக்குத் திரும்பியபோது மாலைவேளை ஆகியிருந்தது. - எங்கும் கூட்டமும் நெருக்கடியும்-போக்குவரத்துப் பரபரப்பும் காணப்பட்டன. . பஸ் நிலையமும் அதன் சுற்றுப்புறமும் வர்ணங்கள் கனிந்து, ஜீவ இயக்கம் மிகுந்த, தனி உலகமாக காட்சி யளித்துக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு இடத்தில் பரபரப்பு மிகுந்தது. கூச்சல் எழுந்தது. கும்பல் அதிகரித்தது. - சுந்தரத்தின் கவனமும் அந்தப் பக்கம் சென்றது. என்ன விஷயம், பார்க்கலாமே என்று அவரும் அங்கே நகர்ந்தார். 'திருட்டுப்பயல்...வசமா மாட்டிக் கொண்டான்