பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 23 "எவ்வளவு துணிச்சல் இருக்கணும் அவனுக்கு!’

  • ரொம்ப சாமர்த்தியமா வேலை செய்தாணய்யா" இவ்வாறு ஒலித்தன பலகுரல்கள்.

‘என்ன தந்திரம் பாரேன். கைப்பையும் நாகரிகத் தோற்றமுமாய் இருந்த ஒரு ஆளின் முதுகில் சேற்றையோ, எதையோ நைலா அள்ளிப் போட்டிருக்கிறான். பிறகு நல்லவன் மாதிரி லார் உங்க சட்டையிலே ஏதோ அசிங்கம் பட்டிருக்கு ஸ்ார். செச்சே, நல்ல டிரஸ் இப்படி அசிங்கமாப் போச்சே, நீங்க எப்படி ஸ்ார் இதோட போக முடியும்னு அனுதாபப்பட்டிருக்கான். நாகரிக நபர், தலையைத் திருப்பி, சட்டையைப் பார்த்து, முகம் சுளித்து, பக்கத் திலிருந்த குழாய் அருகே போனான். பையை கீழே வைத்து விட்டு, சட்டையைக் கழட்டி, தண்ணிர் எடுத்து, ஆசிங்கம் பட்ட இடத்தை சுத்தம் செய்வதில் சிரத்தை காட்டினான். அந்த சமயம் இவன் பையை எடுத்துக் கொண்டு கும்பவில் கலந்துவிடுவதற்கு அவசரப்படவும், அதுக்குள்ளே பைக்காரன் கவனித்து, திருடன்; திருடன்; அதோ அந்த தெட்டையன் தான், என் பையை துக்கிக்கொண்டு டோறான் என்று கூவிக்கொண்டே அவன் பின்னாலே ஒட, பலரும் அவனை துரத்தியிருக்கிறார்கள் அவன் பிடிபட்டான். சரியானபடி அடியும்-உதையும் கிடைத்தது. போலிசும் வந்து விட்டது. இவ்விவரம் பலரது பேச்சுக்களிலிருந்தும் சுத்தரத்துக்குக் கிட்டியது. அப்படிச் செய்த தந்திரசாலியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு, முயன்று கும்பலின் இடையே நெருங்கி மோதி எட்டிப் பார்த்தார் சுந்தரம். திடுக்கிட்டுத் தி கைப்படைந்தார். தாராயணன்தான் அவன்!