பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 C வல்லிக்கண்ணன் ஏசலானாள். காசு வைத்துச் சீட்டாடிக் கொண்டிருந்த, போது, போலீசார் வந்து சந்திரசேகரனையும் அவன் கூட்டாளிகளையும் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். மr:மியார்க்காரி பத்திரகாளி ஆகிவிட்டாள்: சூன்யம் புடிச்ச மூதி, சவம், நீ அழுது அழுதுதான் இந்த வீட்டிலே இருள் மண்டிப் போச்சு. நீ உங்க வீட்டுக்குப் போ என்று ஏசி, கமலத்தைத் துரத்தி விட்டாள். --மகள் சொன்னதைக் கேட்டதும் சிவசிதம்பரம் துயரப் பெருமூச்சு உயிர்த்தார். அவரால் வேறு என்ன செய்ய: இயலும்? - அவரைப் பார்த்துப் பேச வந்த அருணாசலம், வீட்டு நிலவரத்தை அறிந்து, சிவசிதம்பரத்துக்காக அனுதாபப் பட்டார். - 'பெண்ணுக்குக் கல்யாணம் முடிந்ததும் ஒரு பிரச்சினை தீர்ந்தது என்னு சொன்னிங்க... சமூக நிலைமை அப்படி இல்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்னாலும் ஏகப்பட்ட பிரச்சினைகளை பெற்றோர்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கு கல்யாணத்துக்குப் பிறகும் பல பல பிரச் சினைகளைச் சந்திக்க வேண்டியதாகிறது. உண்மையில், ஒரு பெண்ணின் கல்யாணம் அவள் வாழ்க்கையில் புதியபுதிய பிரச்சினைகள் புகுவதற்கு வழிசெய்யும் வாசலாகத்தான் இருக்கிறது' என்றார் நண்பர். 'பெரிய படிப்பு படிச்சவன், பணம்- சொத்து-பெரிய வேலை எல்லாம் உடையவன் நம்ம நிலைமைக்குச் சரிப்பட மாட்டான். சாதாரணப் படிப்பும், சுமாரான வேலையும், மத்தியதர நிலையும் உள்ள ஒருவன் தனக்கு மனைவியாக வருகிறவளை நல்லபடியாகக் கவனித்துக் கொள்வான். கண்கலங்கும்படி செய்ய மாட்டான்னு எண்ணினேன். அவனும் மோசமாகத்தான் நடந்துகொள்கிறான்' என்று சிவசிதம்பரம் குறைப்பட்டுக் கொண்டார்.