பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப்பாட்டு ராமன் அஞ்சு வயசு மூக்கப் பயலுக்கு அந்த வட்டாரத்திலே அநேகம் பெயர்கள் ஏற்பட்டிருந்தன. குண்டோதரன்' "சாப்பாட்டு ராமன் உப்புமாக் கழுகு தீக்கோழி தோசைப் பேய்" என்றெல்லாம் பல பெயர்- ஒரு நபராக விளங்கும் பெருமை பெற்றிருந்தான் அவன். தாயம்மை பிள்ளை’ என்றும் அவனைக் குறிப்பிட்டுப் பேசுவர். - - 'உன் வயிற்றுக்குள்ளே என்னதான் இருக்குதோ! எவ்வளவு கொட்டினாலும், இன்னும் கொண்டுவாகொண்டுவா என்று கேட்குதே அது. நீ சரியான குண்டோதரன் தான்’ என்று அவன் அம்மா அடிக்கடி சொல்லுவாள். இருந்தாலும், அவன் வயிற்றுக்கு அவள் வஞ்சனை செய்யமாட்டாள். காலையில் பழைய சோறும் தயிரும் மரவை நிறைய எடுத்து வைப்பாள் அவள், தன் அருமை மகனுக்கு. உடனேயே வாயில் ஒதுக்கிக் கொள்ள ஒரு துண்டு கருப்புக் கட்டி வேண்டும் அவனுக்கு அப்புறம் முறுக்கு அல்லது சீடை, என்று எதையாவது சட்டைப் பையில் போட்டுக் கொண்டு திசிவான் அவன். சதா அவன் வாய் அரைத்துக் கொண்டே இருக்கும். பன்னிரண்டு மணிக்குச் சுடுசோறு. - சாப்பாட்டு நேரத்தில் சற்றே தாமதமாகி விட்டாலும், 'அம்மா, பசிக்குதே. அம்மா வயிற்றைப் பசிக்குதே! என்று சிணுங்கி, அவளைப் பஞ்சரித்துப் பாடாய்ப்படுத்துவான். வயிறு முட்டச் சோறு சாப்பிட்டாலும்கூட, அவ்வப்போது வேர்க்கடலை, பட்டாணி, உடைத்த கடலை, ஒமப்பொடி மிக்ஸ்சர் என்று எதையாவது தின்று கொண்டே இருப்பதில் ஆர்வம் காட்டுவான் அவன். c