பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 38 அதனால்தான் சில சமயங்களில் தாயம்மை, வா குண்டோதரா, வந்து கொட்டிக்கொள்’ என்று கூப்பிடுவாள். எனினும் பேர்துமா? போதுமா?’ என்று கேட்டும், இன்னும் கொஞ்சம் சாப்பிடுடா என உபசரித்தும் பரிமாறுவாள். தனது மகன் வயிறு விாடக்கூடாது என்ற கவலை தாய்க்கு இராதா என்ன? மூக்கையாவின் சாப்பாட்டு ஆசையை உணர்ந்தவர்கள் அவனை சாப்பாட்டு ராமன்’ என்று பரிகசித்தார்கள். தாயம்மை குடியிருந்த விட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு குடும்பம் வசித்தது. அவ்வீட்டின் தலைவருக்கு ஏதோ ஒரு கடையில் கணக்கு எழுதும் வேலை. அவருக்கு உப்புமா என்றால் ஆசை. ஆகவே வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் விரதம் அனுஷ்டிப்பார். விரத நாட்களில் காலையில் அல்லது இரவில் உப்புமா என்ற நியதி ஏற்படுத்திக் கொண்டிருந்தார் அவர். அந்த வீட்டில் உப்புமா தயாரிக்கும் வாசனை எழ வேண்டியதுதான், மூக்கையா எங்கே இருந்தாலும் அங்கு ஆஜராகி விடுவான். அதுவும், பெரியவர் இலை முன் அமர்ந்திருக்கும் சரியான சமயத்தில்! அப்புதம் என்ன செய்து? அந்தச் சனியனுக்கும் கொஞ்சம் கொடு. முதல்ரக உப்புமாக கழுகாக இருக்குதே இது. நம்ம வீட்டிலே உப்புமா கிண்ட வேண்டியதுதான்; இதுக்கு மூக்கிலே வேர்த்து விடுகிறது. விழுந்தடிச்சு இந்த தரித்திரம் இங்கே ஒடி வந்து விடுகிறது என்று முண்ங்குவார் அவர். இதர சமயங்களிலும் அவர் அவனை உப்புமாக் கழுகு' என்றே குறிப்பிடுவார். அதே மாதிரித்தான் எதிர் வீட்டில் தோசை கூடுகிறபோதெல்லாம் மூக்கையா அங்கு சுற்றிச் சுற்றி வருவான். ஒரு தோசை கொடுத்தாலொழிய அங்கிருந்து நகரமாட்டான். அதனால் அவ்வீட்டினர் அவனை தோசைப் பேய்" என்று மதித்தார்கள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகள், தெருவில் உள்ள சிறுவர் சிறுமிகள் கையிலோ அல்லது பையிலோ என்னி