பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 0 வல்விக்கண்ணன் வைத்திருந்தாலும் சரி, அவர்கள் வாய் ஆடுவது தெரிந்ததும் ஒடி வந்து விடுவான் மூக்கையா. ஏய் ஏய், எனக்கு இல்லையா? என்று தயவாகக் கேட்டான். எனக்குக் கொஞ்சம் கொடுடா என்று கெஞ்சுவான். கொடுக்க மாட்டியா டேய் டேய், இருக்கட்டும்டா கொடுடான்னா..? தான தச்சரிப்டான். கொடுக் காவிட்டால், கையைத் தட்டிவிட்டு, கீழே விழுவதை எடுத்துக் கொள்வான். பைக்குள் கையைப் போட்டு, அகப்பட்டதை அள்ளி வாயில் திணித்துக்கொண்டு குதிப்பான். எனவே அவனை குரங்கு ‘தீக்கோழி என்றெல்லாம் இதர பிள்ளைகள் பழித்தனர். மூக்கையாவுக்கு வேலையும் வாழ்வின் லட்சியமும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதுதான். வீடு வீடாகத் திரினதும் விளையாடுவதும் பொழுது போக்க உதவும். 'இந்த மக்கு ஒரு எழவுக்கும் பிரயோசனமில்லை. சரியான எருமைமாடு இது. எப்படித்தான் உருப்படப்போகுதோ, எனக்குப் புரியவில்லை:' என்று தாயம்மை அடிக்கடி அலுத்துக் கொள்வாள், அவளுடைய அண்ணன் சிவசிதம்பரம் பிள்ளை "கொஞ்சம் செயலானவர். சொந்த மளிகைக்கடை, இரண்டு பகமாடுகள், மூன்று வீடுகள், போதுமான நிலம் எல்லாம் அவருக்கு உண்டு. குழந்தைகளும்- ஒரு ஆணும் ஒரு பெண்ணும்- இருந்தன. பையன் செல்லய்யாவுக்கு நான்கு வயசு பூர்த்தியாகிவிட்டது. பெண் சிவகாமிக்கு மூன்று பேது, சிவசிதம்பரம் பிள்ளைக்கும் அவர் மனைவி ஜானகிக்கும் குழந்தைகளைப் பற்றிய மனக்குறை ஒன்று இருந்தது. பிள்ளைகள் இரண்டும் நன்கு வளராமல், ‘கஞ்சிக்கு இல்லாதவன் வீட்டுக் குழந்தைகள் மாதிரி மெலிந்தே தானப்பட்டன. காரணம். அவை நன்றாகச் சாப்பிடுவது கிடையாது.