பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் C 35 நெய்யும் பருப்பும், பாலும் தயிருமாக நிறைய நிறையக் கலந்து வைத்தாலும் குழந்தைகள் தின்பதில்லை. பெரியவன். தட்டுமுன்னால் உட்கார்ந்து, ஒவ்வொரு பருக்கையாக எடுத்து வாயில் வைத்து ருசி பார்ப்பான். - என்ன இவன் இப்படி குருவி கொரிக்கிற மாதிரிக் கொரிக்கிறான். இப்படிச் சாப்பிட்டால், இது எங்கே உடம்பிலே ஒட்டும்?' என்று ஜானகி கூறுவாள். சோறு சீதேவிடா. சோற்று முன்னாலே உட்கார்ந்து இதுமாதிரி ஆக்கங்கெட்டத்தனமாக நடந்து கொள்ளாதே' என்று கோபிப்பாள் சிலசமயம். ஆயினும் அவன் போக்கு மாறுவதாயில்லை. அண்ணனைப் பார்த்துப் படித்த வழக்கம்தானோ என்னவோ, குழந்தை சிவகாமியும் சோற்றை அளைவதும், விரல்களால் எடுத்து நெடுகிலும் விசிறி அடிப்பதும், வாயில் ஊட்டினால் துர-வது என்று துப்புவதுமாகச் செயல்புரிந்து வந்தாள். தனது போக்கில் அவள் விசேஷ ஆனந்தம் அடைந்ததாகவே தோன்றியது. நோயின் கோளாறாக இருக்கலாம். இது என்று பெற்றோர்கள் வைத்தியர்களைக் கூப்பிட்டுக் காட்டினார்கள் அவர்களும் ஏதேதோ மருந்து கொடுத்துவிட்டு போனார்கள். எனினும் குழந்தைகள் தேறவே இல்லை. காற்று-கறுப்பு-தோஷம் என்று ஜானகி கூறினாள். விபூதி மந்திரித்துப் போடவும், தாயத்து கட்டவும் அநேகருக்கு அவள் பணம் செலவு பண்ணினாள். ஆயினும் பலன்தான் எதுவும் ஏற்படவில்லை. தனது பின்ளைகள் மெலிந்து சோகை பிடித்தவைபோல் இருக்கின்றனவே என்ற கவலையும் அவளை விட்டு நீங்கியபாடில்லை. 密 慈 தியேம்மை அண்ணன் வீட்டுக்கு விருந்தாக வந்து சேர்ந்தாள். இடம் மாற்றம் மூக்கையாவுக்கு இன்பம் அளித்தது என்றாலும் அவனுக்கு நஷ்டமாகவே அமைந்தது.