பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.6 g வல்லிக்கண்ணன் சொந்த விட்டில் நினைத்த வேளையில் இஷ்டம்போல் தின்ன முடியும். விருந்துக்கு வந்த இடத்தில் அது சாத்தியம் படுமா? அவன் வேளர வேளைக்கு நிறையச் சாப்பிடுவதைக் கண்ட ஜானகி அம்மாளுக்குப் பொறாமை ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். r "இப்படிச் சாப்பிடப்படாதம்மா இது தரித்திரம்: என்து அவள் மனம் பேசியது. நம்ம குழந்திைகள் வயிற்றுக்குப் போதுமானபடி சாப்பிடவே மாட்டேங்குது. இந்தக் கரிக்குரங்கு எங்கே எங்கேன்னு பறக்குதே! என்று எண்ணினான் அவள். - தனது பற்றாக்குறை உணவுப் பொருள்களை எவ்வாறு ஈடு செய்யலாம் என்ற யோசனையிலேயே மூக்கையா பொழுதைக் கழித்து வந்தான். அவன் கைவரிசையை செல்லய்யாவிடமும் சிவகாமியிடமும்தானே காட்டமுடியும்? செல்லய்யாவிடம் கெஞ்சிக் கேட்டும் கைநீட்டிப் பெற்றும் கிடைத்ததை எல்லாம் தன் வாயில் போடலானான் மூக்கையா. சிவகாமி முன்னால் ஏதாவது இருந்தால் அவன் தாராளமாக எடுத்துக் கொள்ளத் துணிந்தான். . அவ் இரண்டு குழந்தைகளுக்கும் அவன் செயல் வேடிக்கையாகப்பட்டது முதலில். அவன் இரண்டு மூன்று. இட்டிவிகளை விழுங்குவதும், தட்டில் போடப்படுகிற சோறு முழுவதையும் தீர்த்துக் கட்டுவதும் அதிசயிக்கத் தகுந்த சர்க்கஸ் வித்தை போலவே தோன்றின. ஒருநாள் மாலை வேளையில் வடை செய்தார்கள். மூக்கையாவுக்கு இரண்டு கொடுத்துவிட்டு, மற்ற இரு குழந்தைகளுக்கும் திட்டில் வடைகளை வைத்தாள் ஜானகி. - செல்லய்யாவும் சிவகாமியும் வடைகளை எடுத்துத். தின்னாது, விரல்களால் உருட்டிப் புரட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். தன் பங்கைத் தின்று தீர்த்துவிட்ட மூக்கையா, என்ன சிவகாமி, உனக்கு வடை வேண்டாம்.