பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமா வந்த ஜோர் ! பிள்ளைகள் குதித்துக் கூச்சலிட்டுக் கும்மாளி போட ஆரம்பித்தார்கள். பெரியவர்கள் சந்தோஷ மிகுதியால் ஆளுக்கு ஒன்று சொல்கத் தொடங்கி, ஒருவர் பேச்சில் மற்றவர் குறுக்கிட்டு: இரண்டு மூன்று பேர் ஏககாலத்தில் பேசி, எவர் பேச்சும் எவருக்கும் புரிபடாமல் ஆரவாரித்தார்கள். இதற்கெல்லாம் காரணம் தபாவில் வந்த ஒரு கடிதம் தான். கூட்டணத்திலிருந்து வந்திருந்தது. அங்கு ஏதோ ஒரு பேரிது கம்பெனியில் என்னவோ வேலை பார்க்கும் rாமலிங்கம், தேதி குறிப்பிட்டு, அந்த ஊருக்கு வருவதாக எழுதியிருந்தான். அவன் பட்டனத்தில் வேலை பார்த்துக் கொண் டிருப்பதே அந்த வீட்டாருக்கு ரொம்பப் பெருமையான விஷ2:ம்தான். 'பட்டணத்திலே வேலை நம்ம பையன் பட்டணத்திலே வேலை பார்க்கிறான்’ என்று சொல்லிக் கொள்வதில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தனியானதொரு கர்வமும் சந்தோஷமும் அனுபவித்து வந்தார்கள். என்ன வேலை?” என்று கேட்பவர்களுக்கு, ஏதோ ஒரு கம்பெனிலே வேலை. பெரிய வேலைதான், மாசம், அறுநூறோ, எழுதுறோ சம்பளம் வாங்குறான்' என்றுதான் அவர்கள் பதில் சொல்வார்கள். அப்படித்தான் சொல்ல முடியும் அவர்களால். இங்கிலீஷ் வார்த்தைகளால் ஆன அந்தக் கம்பெனியின் பெயரும், அது நடத்துகிற பிசினஸ் விஷயமும், அவன் வேலை விவரமும்- அவன்