பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ஐ C வல்விக்கண்ணன் அவன் அதுபற்றியே எண்ணி கொண்டிருந்தான், தானும் ஒரு விசித்திரப் பறவையாகி விநோதமாக நடந்து திரிவதாக அவன் கனவுகண்டான். அப்புறம் நினைக்க நினைக்க இந்தநிலை பணியும் குளிரும் மிகுதியாக நீடிக்கிற உலகப் பகுதியில் வேண்டுமானால் நிகழ லாம். வெயில் சுட்டெரிக்கிற நமது நாட்டுக்கு இது ஒத்து வராது என்று அவன் மனம் பேசியது. அதுக்கு வெகுவாகப் பிடித்துப் போயிற்று, சிந்தனையாளர் ஒருவரின் எச்சரிக்கைக் குரல், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரை. -கி. பி. 2381-க்குள் இந்தியா பாலை நிலமாக மாறி விடும். இது உறுதி. இப்பவே காலாகாலத்தில் மழை பெய்வ தில்லை. மழை பெய்தாலும் அது போதுமானதாக இல்லை. எங்கும் வரட்சியும் தண்ணிர் கஷ்டமும் வருடத்துக்கு வருடம் அதிகரித்து வருகிறது. இதுக்கெல்லாம் காரணம் நாடு நெடு இலும் சகட்டு மேன்க்கு மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவது தான். ஒவ்வொரு மலைத் தொடர் மீதும், பன்னெடுங் காலமாக ஓங்கி வளர்ந்து நின்ற பெரும் மரங்கள் சுயநலமி கன சல் பண வாப நோக்குடையவர்களால் வெட்டிச் சாய்க்கப் பட்டுள்ளன. தொடர்ந்து இந்த நாச வேலை நடைபெற்றுக் கொண் டுள்ளது. இதனால் மழை பெய்வது குறைகிறது மழை பெய்கிற காலங்களில் மலைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு நதிகள் மேடிட்டு வருகின்றன. பிரம்மபுத்திரா படுகையில் ஆண்டுதோதும் 14 அடிக்கு மண்மேடு உயர்கிறது. இதன் மூலம் பாதிப்புகள் பல விளைகின்றன. கங்கைச் சமவெளி எதிர்காலத்தில் சதுப்பு நிலப்பிரதேசம் ஆக மாறும். முக்கிய நதிகள் அந்நிலைபெறும். சிறு நதிகள் வறண்டுபோகும், இந்த நாடு முழுவதும் பாலை நிலமாக மாறிவிடும். புள்ளி விவரங்களோடு உணர்ச்சிகரமாக விவரித்திருந்த கட்டுரையாளரின் சிந்தனைகள் அவனுடைய மனக்குகையில் பலவித சஞ்சல நெளிவுகளைப் புகுத்தின.