பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதந்திரப் பறவைகள் ඌ 57 காரியங்கள் பலப்பலவற்றையும் செய்து கொண்டு, பலவித மான உணர்ச்சிகளினாலும் எற்றுண்டு அலைக்கழிக்கப்பட்டு குழம்பித் தவித்து, தன்னைச் சேர்ந்தவர்களையும் பிறரையும் குழப்பியும் திணறவைத்தும் கோபித்தும் சண்டை போட்டும், வாழ்க்கையை அமைதியும் ஆனந்தமும் இல்லாததாக மாற்றிக் கொண்டு, இறுதியில் செத்துப்போக வேண்டியிருக்கிறது! எனவே, வாழ்க்கைப் போராட்டத்தில் மனிதனுக்குத்தான் தோல்வி... இப்படி சிவசிதம்பரம் அடிக்கடி எண்ணிக் கொண் டிருந்ததனால், அவர் உள்ளத்தில் இருட்டு கனிந்து கனத்தது. - அவர் மனிதர் யாரையும் நம்பத் தயாராகயில்லை. எவருடனும் பழக முன்வரவில்லை. தனிமை அவருக்குப் பிடித்திருந்தது. அந்தத் தனிமை அவரது விரக்தி உணர்வு. கொடி வீசிப் படர்ந்து செழிக்கத் துணைபுரிந்தது. சிவசிதம்பரத்துக்கு நண்பர்கள் இல்லை. அவர் &ாருடனும் சுமுகமாகப் பேசிப்பழகுவதில்லை. அவருடைய இயல்புகளை உணர்ந்த அக்கம்பக்கத்தினரும், உற்றார் உறவினரும் அவரை விட்டு விலகியே போனார்கள். - அவர் ஒரு உத்தியோகம் பார்த்தார். அதிலேயே ஆழ்ந்திருந்தார். கண்டிப்பாகவும் கறாராகவும் நடந்து வந்தார். எப்போதும் எதையாவது படித்துக் கொண்டிருந் தார். படிக்காத நேரங்களில், ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பது போல் உம்மென்று உட்கார்ந்திருப்பார். அவருடைய நாட்களில் சந்தோஷங்களுக்கே இடம் இல்லாது போயிற்று. என்றோ வரக்கூடிய மரணத்தை எதிர்பார்த்து அவர் காத்திருப்பது போலிருந்தது. சில சமயங் களில் அவருடைய மனமே அதை சொல்லிக் கொண்டது. சாவு சீக்கிரமே வந்து விட்டால் நல்லது. அர்த்தமற்ற வாழ்க்கையில் வீணர்க எது எதையோ செய்து பொழுது,