பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ8 () வல்லிக்கண்ணன் போக்குவதில் என்ன பிரயோசனம்: செத்துப் போவதே. 选 - --> ఓఢ్ఙఃఖి. இந்த நினைப்போடுதான் சிவசிதம்பரம் அந்த வேளையில் ரஸ்தாவில் நடந்து கொண்டிருந்தார். மாலை தேரம். பொங்கிப் பிரவ்ாகித்துச் சுழித்து அலை எற்றிப் புதண்டோடும் நதி மாதிரி நாகரிக ரஸ்தா இயங்கிக் கொண்டிகுந்தது. விதம் விதமான வேக வாகனங்கள். அவசரம் அவசரமாக விதைகம் புயலாகப் போக்குவரத்து சாதனங்கள். பரபரப்போடு செல்லும் பாதசாரிகள். அங்கங்கே தடை களால் நின்று விடும் சில வண்டிகள், மனிதர்கள். அவருக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. வெறுப்பு துரையிட்டது. சனியன்கள்! எதுக்கு இத்தனை வேகம்: என்ன எழவுக்கு இத்தனை அவசரம்? சாகப் போகிற பீடைகள், தன்னுள் அலைபுரண்ட எண்ணத்தில் லயித்திருந்த சிவசிதம்பரம் தன்னை அறியாமலே ரஸ்தாவின் ஒரத்துை. விட்டு நகர்ந்து, மத்தி என்று சொல்லப்பட வேண்டிய அளவுக்கு ரோடில் வந்து விட்டார். - - அப்போது அவர் எதிர்பாராத அதிர்ச்கி அவருக்கு தேகிட்டது. வேகமாக எதிரே வந்த மோட்டார் பைக் அவரை மோதுவது போல் நெருங்கியது. பின்னேயிருந்து ஒரு. ஆட்டோ ரிக்ஷா வெகு அவசரமாக வந்தது. இரண்டில் எதிலாவது ஒன்றில்-அல்லது இரண்டிலுமே-- அடிபட்டுக் கீழே விழப் போகிறோம் என்று அவருக்குத். தோன்றியது. அநியாயமாக நடுரோட்டில் சாகப் போகிறோமே என்றொரு உணர்ச்சி. அவர் உடல் தடுங்கியது.