பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதந்திரப் பறவைகள் C 59 இருட்டில் வாழ்கிற பூச்சி திடீர்வெளிச்சம் தாக்கியதும் செயலற்றுத் திணறித் தவிப்பது போல அவரும் திண்டா டினார். இதோ மோட்டார் பைக்... இதோ இதோ ஆட்டோ ரிக்ஷா... மோதப் போகிறது: சாகப் போகிறோம். அட பாவிகளா என்று அலறி விட்டதாக நினைத்தார். வாயை திறந்து திறந்து மூடினாரே தவிர அவரால் எந்த ஒலியும் எழுப்ப இயலவில்லை. - கிரீச்சிட்டு நின்றது ஆட்டோ. ஸ்டன் பிரேக் போட்டுத் திறமையாக வண்டியை நிறுத்திவிட்டார் அதன் டிரைவர். - - மோட்டார் பைக் ஆசாமி சிறிது வெட்டி முறித்துத் தன் வண்டியை விலக்கி வழி மேல் சென்றார். மடைவன்: ரோட்டிலே ஒரமா நடக்கணும்கிற அறிவு இல்லே?" என்று திட்டிக் கொண்டே பறந்து போனார். அவர் அவசரம் அவருக்கு: - - ஆட்டோ ரிக்ஷா டிரைவரும் ஏன்யா, வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டியா? பார்த்துப் போ!' என்து உபதேசித்து விட்டு, வண்டியை நகர்த்தி ஒட்டிச் சென்றார். - சிவசிதம்பரத்தின் உடல் படபடப்பு குறையவில்லை. நெஞ்சு திக் திக்கென்று அடித்தது. ஒருவித பயம் உள்ளில் நிறைந்திருந்தது. சாவு நெருங்கி வந்ததில் சிறிதளவு சந்தோஷம் கூட அங்கே தலை காட்டவில்லை. நல்லவேளை, பிழைத்தோம் என்ற திருப்திதான் இருந்தது. # அவர் நின்று, கவனித்து, நிதானமாக ரோடு ஓரத்தில் நடக்கலானார், சாவு பற்றி சர்வசாதாரணமாக எண்ணி னாலும், சாவை வரவேற்று எதிரேற்க நாம் தயாராக இல்லை. பயம் தான் முந்துகிறது. உயிராசை வலியது சாவை வரவேற்று சகஜமாக எதிர்கொள்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.