பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 C இல்விக்கண்ணன் காரியங்களிலே எப்படி இருப்பீங்களோ? ஒரு தடவை சீக்கிரம் சாப்பிடதது. இன்னொரு தடவை சாப்பிடாமலே இருந்திடறது. இது தப்பு. குறிப்பிட்ட ஒரு டைம் வைத்துக் கொண்டு டாண்ணு அந்த நேரத்திலே சாப்பாட்டை முடிச்சிடணும். சாப்பாட்டு நேரத்திலே சாப்பாடு; மத்ததெல் லாம் அப்புறம்தான்னு வழக்கப்படுத்திகிடணும். அதுதான் உடம்புக்கு நல்லது என்று உரிய பாவங்களுடன் பேசித் தீர்த்தாள் அவள் . தேங்க்ஸ், இனிமேல் அப்படியே செய்ய முயற்சிக்கிறேன்: என்றான் சநதிரன். அதுசரி, இன்னிக்கு ஏன் இவ்வளவு சீக்கிரமாவே அப்பிடுநீங்க? எங்காவது கேம் ப்பா? என்று அதியும் அவாவுடன் அவள் விசாரித்தாள்.

  • ஊக்கூம். இவரு என் சிநேகிதர் ஊரிலேயிருந்து வந்திருக்காரு. காலையிலேயே குளிச்சாச்சு. உடனேயே காலைச்சாப்பாட்டையும் முடிச்சிரலாமேன்னு வந்தோம். வந்தது தப்பா?

அவள் சிரித்தாள். உள்ளே போனாள். தோசை எடுத்து வத்து வைத்தாள். வடை வேணுமா?’ என்று கேட்டாள். சாப்பிட வந்த இன்னொருவரை கவனிக்கச் சென்றாள். அது பெரிய ஒட்டல் ஒன்றுமில்லை. வீட்டிலேயே சிறு அளவில் நடைபெற்று வந்த உணவு விடுதி. குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள- வாடிக்கையான - சில நபர்களுக்கு மட்டுமே அங்கே பதிவாக மூன்று வேளைகளும் உணவு வகைகள் படைக்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு வேளையும், அதிகப்படியாக ஐந்து அல்லது ஆது பேருக்கு உணவு தயாராக இருப்பதும் உண்டு. வழக்கமாகச் சாப்பிடுகிற யாராவது இப்போது சந்திரன் செய்ததுபோல தனக்கு தெரிந்தவர்: வேண்டியவர் என ஒன்றிருவரை உடன்