பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.8 C வல்லிக்கண்ணன் போகப் போக அவளுக்கும் இந்த வாழ்க்கை பிடித்து. விட்டது. இதுவும் சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு என்றே. பட்டது அவளுக்கு. பல ரகமானவர்கள் சாப்பிட வந்தார்கள். சிலருடைய தோற்றம் அவளுக்கு இனிதாக இருந்தது. சிலரது பார்வை இளம் வெயில்போல் இதம் தந்தது. சிலருடைய சிரிப்பு மெல்லிய காற்று மாதிரி கிளுகிளுக்கச் செய்தது. சிரித்துப் பேசி, சிரிக்க வைத்து ரசித்த சிலர் போக்கு அவள் உள்ளத்தில் புல்லரிப்பு உண்டாக்கியது. zo. அவர்களில் சந்திரனும் ஒருவன். அவன் சிரித்துச் சிரித்துப் பேசினான். அவன் பேச்சு அவள் உள்ளத்தில் கிண்கிணிநாதங்களை இசைத்தது; முகத்தில் மகிழ்வின் வெயில் படரச் செய்தது. அவனிடம் பேச்சு கொடுத்து பேச்சு வாங்குவதில் அவள் தனி ஆனந்தம் கண்டாள். மற்றும் ஒன்றிரண்டு பேர்களிடமும் அவள் இப்படிப். பழகினாள். அவர்கள் அவளை அதிகமாகவுே சீண்டினார்கள். அவர் களுடைய கேலியும் கிண்டலும் அவளுக்குப் பிடித்துத் தானிருந்தன. அன்றாட வாழ்க்கை போர் அடிக்காமல்’ குளு குளு என்று அமைவதற்கு உத்வும் ரசமான விளையாட்டுக்களாகவே அவள் அவற்றை மதித்தாள். அவள் இயல்பை கவனித்த நண்பன் ரத்னம் 'இதெல்லாம். எங்கே போப்திற்குமோ!' என்று எண்ணிக்கொண்டான். மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு, முன்னிரவு நேரம், இரவுச் சாப்பாட்டுக்கு ஒன்றிருவராக வந்து போவார்கள், அப்போது இன்னும் ஆட்கள் வரவில்லை. மேஜைமுன் உட்கார்த்து ஒரு பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த புஷ்பா துரத்தில் சந்திரன் வருவதை, கவனித்தான். வேடிக்கையாக அவனை திடுக்கிட வைக்க,