பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் குறுக்குத்துறைக் கோயிலில் இன்னும் திருவிழாக் கட்டம் இடித்து நெருக்கிச் சாடவில்லை. அப்படி கும்பல் முட்டி மோதுவதற்குள் பெரியவர்களும் சின்னவர்களுமாய் ஆற்று நீரைக் கலக்கி குட்டைப்புழுதி' ஆக்குவதற்குள் நிம்மதியாய் குளித்து முடித்துவிட்டு நெருக்கடி இல்லாமல் ஆர அமர முருகனை தரிசித்து, மன நிறைவோடு வீடு திரும்பலாம் என்ற எண்ணத்தோடு, அவசரம் அவசரமாக சீக்கிரமே வந்த பக்தர்கள் தனித்தனிய ராயும் இருவர் மூவராயும், சிறுசிறு குழுவினராகவும் கோயிலை விட்டு வெளியே வந்து கல்பாலத்தின் மீது சாவகாசமாய் நடக்கும் காலைவேளை. அப்போதுதான் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது. - பக்தர்கள் கும்பல் கூடுவதற்குள், அவர்களுடைய திரளான வருகையை எதிர்நோக்கி காசு சம்பாதிக்கும் நோக்கத்தோடு சீக்கிரமே வந்திருந்த இதைகமான பிச்சைக்காரர்களும், கொழுந்து-மரு-செவ்வந்திப்பூ விற்கும் சில்லறை வியாபாரிகளும் கல்பாலத்தின் மீதும், கோவிலைச் சுற்றியுள்ள மணலிலும், வெளிப்பிரகாரத்திலும் முகாமிட்டு, அந்த இடத்துக்கு திருவிழாக் களை சேர்த்தவாறு காட்சி தந்தார்கள். அன்றுதான் வைகாசி விசாகம். விசாகம் என்றால் முருகனுக்கு உகந்தது. திருச்செந்துாருக்கு அடுத்தபடியாகக் கருதப்பட்ட குறுக்குத் துறையிலும் விசாகம் திருவிழா முக்கியமானது; கும்பல் சேர்ப்பது அந்த ஜில்லாவின் .பலப்பல ஊர்களிலிருந்தும் சாமி கும்பிடவும், கம்மா பொழுது போக்கவும் ஆண்களும், பெண்களும் குழந்தை குட்டிகளோடு