பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 75 ஆமா வேறே எங்கே போறது?’ என்று சலிப்புடன் சொன்னார் பெரியவர். ‘அங்கே என்ன பண்ணுதிக? பொழுது எப்படிப் போகுது? "சும்மா இருக்கேன்னு தான் சொல்லனும். விவசாயத்தை கவனிச்சுகிடுதேன்...... நான் என்ன கவனிக்கிறது! நடக்க வேண்டிய வேலைகள் ஆதது பாட்டுக்கு ஒழுங்கள் நடத்து வருது... பொழுது போறதுக்கு என்ன இருக்கவங்களுக்கும், செத்தவங்களுக்கும் பொழுது ஒடிக்கிட்டேதான் இருக்கு. இன்னைக்கு செத்தா நாளைக்கு ரெண்டாம் தான் அப்படீன்னு சொல்லுவாங்க. இப்ப வருசம் பொறந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ளே எத்தனையோ மாசங்க ஒடிப் போயிட்டுது. பின்னே சொல்லுதிகளே!...” கைலாசம்பிள்ளை இப்படித்தான். பேச வாய்திறந்து விட்டால், வார்த்தைகள் அப்புறம் குற்றால அருவிதான். அவள் சிரித்தாள். கைலாசம்பிள்ளை அன்னைக்கு இருந்த மாதிரித்தான் இன்னைக்கும் இருக்காரு. அதே மாதிரி தான் பேசுதாரு..." ‘அண்ணாச்சி எப்படி இருக்காக? விசாகத்துக்கு வரலியா? என்று பிள்ளை அவளிடம் கேட்டார். - ‘நல்லாத்தான் இருக்காக. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க, நான் வரலேன்னிட்டாக...ஆமா, உங்களை பாளையங்கோட்டைப் பக்கமே காணமே? வெளியூரு எங்கும் போறதே இல்லையா? "ஆமா. வீட்டோட இருப்பதுதான் ரொம்ப சவுகரியம்னு தோணுது. எங்கெயும் ஊர்வழி போகணும்னாலே சிண்ட்ரம் புடிச்ச எழவாய் படுது. வேளா வேளைக்கு சாப்பிடறது, எதையாவது படிக்கிறது; இல்லேன்னா படுத்துத் துரங்கறது.