பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் o 7 சிவபுரம். . அழகான ஊராக இருந்தது. முன்னொரு காலத்தில் அல்ல. இருபது இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்புவரை. வளர்ந்தோங்கிய ஆலமரங்கள் துரணென இருபுறமும் நின்று, நடுவில் நிழல் அமைத்துத் தரும் சாலையில் தடப்பதே சுகமான அனுபவமாக இருக்கும். அதிலும், உயர்ந்த கரையென அமைந்த ரஸ்தாவின் ஒருபக்கம், சிற்றலைகள் சிலிர்க்கும் நீர்ப்பரப்பு குளுமையாய் விரிந்து கிடக்கிற குளமும்- - இன்னொரு பக்கம் துளிர்த் தலைகளைக் காற்றில் அசைந்தாடவிட்டுப் பச்சைக்கடலெனக் கண்னெட்டிய துரமெல்லாம் விசாலித்துக் கிடக்கும் நெல் வயல்களும், பச்சைப்பந்தலெனக் கவிந்து கிடக்கும் ஆலமரங்களில் மைனாக்கள் கூடிக்குலவிக் கலகலப்பொலியைக் கொட்டிக் கவிழ்க்கிற சூழ்நிலையும் மாலை உலா டோகிறவர்களுக்கு மட்டும்தான் மனசுக்கு நலம் பயக்கும் என்பதில்லை. எவ்வேளையிலும் எலருக்கும் குளுமையும் இதமும் தரும். ஆனால் இப்போது அல்ல! முன்னொரு காலத்தில்’ என்று சொல்லப் படவேண்டிய அவசியத்தை உண்டாக்கி விட்ட இருபது- இருபத்தைந்து வருட காலகட்டத்திலே தான். , . 3. - ஊரில் வேலையற்றவர்கள் பெருகினார்கள். எதை நாசப்படுத்தியும் எம் நலம் பேணுவோம் எனத் துணிந்த வர்கள் அதிகரித்தார்கள் பொதுச் சொத்தைப் பாழ் பண்ணி , எப்படியும் பிழைப்பு நடத்துவோம் என முனைந்தவர்கள் பெருத்து விட்டார்கள். - -