பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் சிரித்தாள்! அவள் குற்றம் செய்தவள். கண்டுபிடிக்க வேண்டிய முறைப்படி கண்டுபிடித்து, நிரூபிக்கப்பட வேண்டிய விதிப்படி கையும் களவுமாக’க் குற்றம் சாட்டப்பெற்று, கைது செய்யப்பட்டவள். அவள் பெயர் இந்திரா என்று தெரிவித்தாள். அதுவே அவளுடைய நிரந்தரமான பெயராக இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. இவளே வேறு தெருவில் ஜெயபூரீ என்றோ, ராதா என்றோ பெயர் சொல்லியிருந் திருக்கக் கூடும். இன்னொரு ஊரில் செல்லம்மா ஆகவோ, சிவகாமி அல்லது சுப்பம்மா என்றோ நாளோட்டியிருக்கக் கூடும். - பார்க்கப்போனால், பெயரில் என்ன இருக்கிறது! அவள் செய்த தொழில்தான் குற்றமானது; தண்டனைக்கு உரியது. அதற்காகத்தானே அவளை சட்டத்தின் பாதுகாவலர்கள் பிடித்திருந்தார்கள்? அதற்காகத் தானே உரியமுறையில் விசாரணை நடத்தி, நீதியின் பெயரால் தண்டனையும் கொடுக்கப்படவிருந்தது? உணர்ச்சி உத்துதலினால், சதைத் தினவினால், மன அரிப்பினால், பணத் திமிரினால், புறக் காரணம் எதுவாய் இருந்தால்தான் என்ன?-துண்டப்பட்டு, அவள் துணையை நக்டி வந்தவர்கள் பலரும் இஷ்டம்போல் பேர் சொல்வி அவளைக் கூப்பிடவில்லையா என்ன? ஏட்டி, ஏய், இந்தா, ஏ புள்ளே, ஏ. குட்டி என்ற தன்மையில் எல்லாம் அவளை அழைக்கத்தான் செய்தார்கள். அவளோடு பழகினார்கள். அவள் பிழைப்புக்காகச் செய்து வந்த தொழிலில், அவளுக்கு பிஸினஸ் வெற்றி தேடித்தந்த கூட்டாளிகளாய் பழகிய சமூக