பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ () வல்லிக்கண்ணன் ஆண்கள் இப்போது குற்றவாளிகளாய் பதிவு செய்யப்பட வில்லை. இந்திரா திடீரென்று சிரித்தாள். இதை எண்ணி அன்ன். ஒருவன் வந்தான். வழக்கம்போல் பழகினான். பணம் தந்தான். பிசினஸ் ரீதியாக எல்லாம் நடந்தது. பின்னாடியே சட்டத்தின் பேரால் காவலர் வந்தார். முன்னதாகவே அடையாளமிடப்பட்ட நோட்டுகள் என்றார் பிடித்தாச்ச: என்றார். விபசாரம் செய்தது குற்றம் என்று அறிவித்தார். அனைத்தும் உரிய முறைப்படி நடைபெற்றன... இந்திரா இப்போது சிரித்தாள். நாடக ரீதியாக இந்த நடவடிக்கையை எண்ணி அல்ல. நான் செய்தது இழிவான தொழில் என்றால், என்னைப் போன்றவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மேற்கொண்டிருக்கிற மோசமான தொழி லைக் கண்டுபிடித்து, நிரூபிப்பதற்காக நீங்கள் கையாள்கிற நடை முறைகள் மட்டும் மேலானவையோ என்று அவள், மனம் கேட்டதை ஒலிபரப்பி அவள் சிரிக்கவில்லை. அவள் கண்முன்னே ரஸ்தா நீண்டு கிடந்தது. நாகரிகப் பெரு நகரத்தின் முக்கிய ரோடுகளில் ஒன்று நாகரிக உயிரோட்டம் அவசர வேகத்தில் இயங்க உதவிக் கொண் டிருந்த நரம்பு, அப்போது ஒரு ஸ்கூட்டர் மிதப்பது போல் வழுக்கிச் சென்றது. அதில் இரண்டு பேர் ஒருவனும் ஒருத்தியும் அந்த ஒருத்தி இந்திராவினால் பல சந்தர்ப்பங்களில் தரிசிக்கப் பட்டிருந்த யுவதி. ரொம்ப ஸ்டைல். பகட்டுப் பூச்சிபோல், இளைஞன்மீது ஒட்டிக்கொண்டிருந்தாள். அவன் தோள்களில் கைபோட்டு முகம் சிரிப்பின் காடு. ஏதோ சந்தோஷ விஷயம் போலும் சவாலைச் சமாளிக்கிற காரியம் போலும். சிரித்த படியே, பார்ப்போமா பார்த்துப் போடுவோம் அதையும்