பக்கம்:சுதந்திரமா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சுதந்தரமா!

கொசு மொய்க்கும் இந்தப் பள்ளத்தில் உனக்கு எப்படியப்பா இத்தனே மோகம் வந்தது? போன ஜன்மத் தில் ஏற்பட்ட பழக்கங்களிற் சில இந்த ஜன்மத்தில் வந்தடையும் என்று சொல்கிருர்களே; அப்படி உனக்குப் போன ஜன்மத்தில் கொசுக்களோடு உறவு இருக்குமோ? நல்ல ரோடு இருக்க அதிலேயாவது ஒடிப் பழகினல் உன் காலுக்குப் பலம். அதை விட்டு விட்டு, கேர் பாதையை வேண்டுமென்றே விட்டு விட்டு இந்தப் பள்ளத் தில் உள்ள தண்ணிரைக் கலக்கிக் குட்டை குழப்பு கிருயே நேர்பாதையில் கடக்காவிட்டாலும் போகிறது: குட்டை குழப்பாமல் இருந்தால் போதும், தம்பி. அரசி யலிலும் மற்றச் சமுதாய விஷயங்களிலும் நெடுங்கால மாகத் தேங்கிக் கிடக்கும் தண்ணிரைக் குழப்புகிற மனி தரைப்போல இருக்கிருயே ஒகோ, எனக்குப் புரிகிறது உன் யோசனை. விளையும் பயிர் முளையிலே என்பதை நிரூ பிக்கிருயோ? பிற்காலத்தில் உன் வாழ்க்கையில் குட்டை குழப்பி வெற்றி யடையும் மார்க்கத்துக்கு இந்தத் திறந்த வெளிப் பள்ளிக்கூடத்தில் பயிற்சி பெறுகிருயோ சபாஷ்! நல்ல காரியம் செய்தாய் !

அப்படித் தான் பழக வேண்டும். தெளிவான ைேரக் கலக்க வேண்டும். ஒருவரும் ஏவாமலே, விரும்பாமலே, சர்வ சுதந்தரமாகத் துணிந்து புகுந்து கொள்ள வேண்டும். நீ குழப்புகிற குழப்பத்தில் வழியில் போகிறவர்களும் பயன்பெற வேண்டும். உன் விளையாட்டின் விளைவாகச் சேற்று ைேர ஆடையில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு காரியம் செய்; உன் வேலைக்கு மிகவும் பொருத்த மான விஷயம். கொஞ்சம் கற்களைக் கொண்டுவந்து போட்டுக் கொள். யாராவது வந்தால் உன்னை மிரட்டாமல் இருக்க வேண்டுமல்லவா? அந்தக் கல்லக் கொண்டு அற் புத சாமர்த்தியத்தைக் காட்டலாம். இந்தக் கொசுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/10&oldid=685917" இலிருந்து மீள்விக்கப்பட்டது