பக்கம்:சுதந்திரமா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டுக் கணக்த 93,

அவள் பேசவில்லே. கண் கலங்கியது. ஒரு சொட்டுக் கண்ணிரும் வந்தது. ‘என்றைக்காவது கடைக்குப் போளுல் இந்தத் தொல்லேதான். நான் என்ன, பட்டும் பட்டாவளி யும் வாங்கிப் பணத்தைக் கரைக்கிறேனே ? எங்காவது போகலாமென்ருல் இரண்டாம் புடைவையாகக் கட்டிக் கொள்ள நல்லது ஒன்றும் இல்லே. ஒவ்வொருத்தி கட்டிக் கொண்டிருக்கிறதைப் பார்த்தால்......" அவள் விம்மினுள். அவள் கண்ணிர் கண்டு என் கோபக் கனல் அனைத்து போயிற்று. "சரி, இன்று கணக்கு எழுத வேண்டாம். நாளைக்கு எழுதிக் கொள்கிறேன்” என்று சொல்லி அன்றைச் சண்டைக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.

மறுநாள் இரண்டு பேருக்கும் நிதானம் வந்தது. நான் உண்மையை உணர்ந்தேன். அவள் கடைக்குப் போன போது புதிய மோஸ்தர்ப் புடைவைகள் வந்திருந்தன. அப்படி ஒன்றும் நூறு. இருநூறு பெறுவதல்ல. நாற்பது. ஐம்பது, அறுபதுக்குள்ளேதான். அவளுடைய சிநேகிதி கமலவல்லி நாலு புடைவை எடுத்தாள். இதே தெருவில் கோடியில் இருக்கும் குமாஸ்தாவின் மனேவிகூட இரண்டு புடைவை வாங்கிள்ை. இவளுக்கும் வாங்கவேண்டும் என்று ஆசை தோன்றியது ; அதை வளர விடவில்லை. ஆனல் குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா ? உடனெத்த சிநேகிதி நாலு புடைவைகளே வாங்குகிருள். நம்மைவிடக் குறைவாகச் சம்பளம் பெறுகிற விட்டுப் பெண்மணி' இரண்டு வாங்குகிருள். இவள் மட்டும் வெறும் ரவிக்கைத் துண்டு மாத்திரம், வாங்கி வருவதா! நல்ல வேளை, ஐம்பது ரூபாயாக எடுத் துக்கொண்டு போள்ை. . .

ஒரு புடைவையைப் பொறுக்கி எடுத்தாள். காற்பத் தெட்டு ரூபாய் விலை. கையில் இருந்ததோ ஐம்பது ரூபாய். தான். ரவிக்கைத் துண்டு ஆறு ரூபாய்க்காவது எடுக்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/101&oldid=686007" இலிருந்து மீள்விக்கப்பட்டது