பக்கம்:சுதந்திரமா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் ே 637 99

- இவ்வாறு படிப்படியாக, ரேடியோ வாங்கவேண்டும்

என்ற விருப்பம் நினைவாகி, கினேவு உறுதியாகி, உறுதி திட்டமாகி, திட்டம் செயலாகியது. நானூற்று ஐம்பது ரூபாய் கொடுத்து ஒரு ரேடியோ லெட்டை வாங்கி' விட்டேன். - -

வாங்கின புதிதில் எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு உவமை இல்லே. என்னேக் காட்டிலும் என் மனைவிக்குத் தான் எல்லேயற்ற களிப்பு. உலகத்திலுள்ள சங்கீத வித்து வான்களேயெல்லாம் விலக்கு வாங்கிவிட்டதாக அவள் கினைவு. சின்ன வயசில் யாரோ வைதிகர் ஒருவரிடம் ஆறுமாசம் சில கர்நாடகக் கீர்த்தனைகளே அவள் சொல்லிக் கொண்டாள். என் கல்யாணத்துக்கு முன்பு அந்தப் பாட்டுக்களைப் பாடிக் கொண்டிருப்பது வழக்கமாம்; அத ல்ை அவள் தன்னை ஒரு சங்கீத ரஸிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிருள். எனக்குச் சங்கீதத்தை அநுபவிக்கும் விஷயத்தில் ருசி பார்த்து அநுபவிக்கத் தெரியாது. கன்ருக இருக்கிறது, இல்லை என்று ஒரு விதமாகச் சொல்வேன்.

ரேடியோ வந்தபிறகு என் மனைவி சதா அதைத் திருகிக்கொண்டே இருப்பாள். நானும் ராத்திரி காலங் களில் திருகிப் பார்ப்பேன். கர் புர் சத்தங்கள், குகூகூகூ குக்குக் கூகூ என்ற ஒலிகள், என்ன என்னவோ புரியாத மொழிகள் ஆகியவற்றையெல்லாம் கேட்பேன். நல்ல பாட்டாகச் சென்னை ரேடியோவில் பாடிக்கொண் டிருப்பார்கள். அதை ஒரு கிமிஷந்தான் கேட்பேன். அடுத்த கிமிஷத்தில் அதை மாற்றுவேன். ருஷ்யாக்காரர்கள் வெளி யிடும் அரசாங்க ரகசியத்தை எப்படியாவது கண்டுபிடித்து விடவேண்டும் என்று ஆத்திரமுள்ளவனப்போல அவசர அவசரமாகத் திருகிக்கொண்டே இருப்பேன். எதாவது ஜப்பான் பாஷையில், 'காண்ட்டுங் மதுங் சங், யோஷினே ஜங்கஷா" என்று உளறும். அதில் அரை நிமிஷம் நிற்பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/107&oldid=686013" இலிருந்து மீள்விக்கப்பட்டது