பக்கம்:சுதந்திரமா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் ரேடியோ | 101

கண்ண ராவி போதுமே!’ என்று நான் சொன்னல், 'இன் னும் கொஞ்சம் பார்க்கலாம்” என்று இருப்பாள். கடைசி யில் அவளுக்கே சலிப்புத் தட்டிவிடும். பேசாமல் இந்த ஊர்ப் பாட்டையே கேட்கலாம்” என்று திருப்புவாள். அப் போது, 'ஆல் இண்டியா ரேடியோ! மதருஸ். இத்துடன் இன்றைய கிகழ்ச்சி முடிவுறும் என்பது காதில் விழும்.

இப்படிச் சில மாதங்கள் ரேடியோ எங்கள் கையில் படாத பாடு பட்டது. சில நாட்களில் பொறுமையாக அரை மணி நேரம் ஒரே நிகழ்ச்சியைக் கேட்குமளவுக்கு நாங்கள் கிதானத்துக்கு வந்தோம். சினிமாப் பாட்டென்ருல் அவள் ஒன்றை விடுவதில்லை. பேச்சோ, செய்தியோ அவள் காதில் விழக்கூடாது. சங்கீதம் கொஞ்சம் கேட் . பாள். நாடகம் என்ருல் இரண்டு பேரும் கேட்கிறதுண்டு. இந்த ஆசையெல்லாம் ஆறே மாதங்கள். பிறகு-? -

ரேடியோவில் காலே நேரங்களிலும் மால நேரங் களிலுந்தான் நிகழ்ச்சிகள் அதிகம். கல்ல நிகழ்ச்சிகளும் அப்போதுதான் நடக்கின்றன. எனக்குக் காலேயும் மால் யுந்தான் வீட்டில் வேலை செய்யும் நேரங்கள். இரவு ஏதாவது சுவாரசியமாக ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பேன். 'இன்றைக்கு ரேடியோவில் தாள வாத்தியக் கச்சேரி நீங்கள் கேட்கவில்லையா?" என்று என் மனைவி கேட்பாள். எனக்குத் தாள வாத்தியக் கச்சேரியென்ருல் கொஞ்சம் பிரியந்தான். ஆனல் அவள் கேட்டது கிண்டல் "அப்படியா வை, கேட்கலாம் : என்ருல் அவள் ரேடியோவை வைப்பாள். இப்போது குலோப் ஜான் பாதுஷா ராகத்தில் பாடுவாள்' என்று அறி விப்பு வரும். தொடர்ந்து சினிமாச் சங்கீதம் நடைபெறும். அவள் உற்சாகமாகக் கேட்பாள். சுவாரசியமாகப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேனல்லவா? அதற்கு வந்தது ஆபத்து. சதா போட்ட கிராமபோன் தட்டுகளையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/109&oldid=686015" இலிருந்து மீள்விக்கப்பட்டது