பக்கம்:சுதந்திரமா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 - சுதந்தரமா!

போட்டுப் போட்டுக் காதை மழுங்க வைப்பதில் ரேடி யோக்காரர்கள் வல்லவர்கள். அவற்றை எப்படித்தான் திருப்பித் திருப்பி மக்கள் கேட்கிருர்களோ, தெரியவில்லை. 'தினந்தோறும் அரிசிச் சோற்றையே சாப்பிடுகிறீரே ! உமக்கு அதில் சலிப்பில்லாமல் இருக்கிறதே! ஏன்?” என்று அவர்கள் கேட்டால் எனக்குச் சமாதானம் சொல் லத் தெரியாதுதான். ஆனலும் ரேடியோவில் அந்தப் பாட்டு வரும்போது பேசாமல் அந்தப் பெட்டியை உடைத்து விடலாமோ என்று ஆத்திரங்கூட வருகிறது. அவள் என்ன சொல்கிருள் தெரியுமோ? 'இந்தச் செய்தி கிய்தி யெல்லாம் எதற்குப் போட்டுப் பொழுதை வீணடிக் கிருர்கள் ? அதைக் கேட்கும்போது இதை உடைத்து விடலாமா என்று கோபம் வருகிறது ' என்பது அவ ளூடைய நேர்மையான அபிப்பிராயம்.

'அவளுக்குப் பொழுது போகவில்லை : அதனால் சகித் துக்கொண்டு ரேடியோக் கேட்கிருள் என்று முன்னல் கினேத்தேன். கடைசியில் அவளுக்குக் கூடச் சலித்து விட்டது. - *

'இன்று யார் கச்சேரி ? நி கேட்கவில்லையா દુઃ:

"யார் கச்சேரியானல் என்ன? எல்லாம் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. எனக்குக் கைக்காரியம் இருக் கிறது என்று போய்விடுவாள். . . . -

ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை யாரா வது திருப்புகழ் பாடினுல் சிறிது நேரம் கேட்கிருேம். 'ஏதோ ரேடியோ லெட்டை வாங்கி விட்டோம். இருந்து விட்டுப் போகிறது என்றுதான் வைத்திருக்கிறேன்.

எப்போதாவது ரேடியோவில் நான் பேசும்போது அந்தப் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் கேட்க இது உதவு: கிறது. சின்னக் குழந்தையிடம் அவள், "அப்பா பேசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/110&oldid=686016" இலிருந்து மீள்விக்கப்பட்டது