பக்கம்:சுதந்திரமா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. சுதந்தரமா !

சொல்லித்தந்த, தாமே செய்து காட்டிய, நிர்மாணத் திட் டத்தை நாம் மேற் கொள்ள வேண்டாமா?

நீ இப்போது சுதந்தரத்தை மாத்திரம் பயன்படுத்திக் கொள்கிருய். உன் மனத்துக்கு உகந்தபடி விளையாடு கிருய் காலுபேர் நடக்கும் பாதையில் சுதந்தரமாகப் பெய்த மழைத் தண்ணிர் சுதந்தரமான பள்ளத்தில் சுதந் தரமாகத் தேங்கி நிற்கிறது. அதில் இறங்கி விளேயாடும் சுதந்தரத்தை நீ உபயோகப்படுத்திக்கொள்வதை இப் போதுதான் உணர்கிறேன். என்ன இருந்தாலும் நான் அடிமை வாழ்விலே பலகாலம் வாழ்ந்தவன், டார். அந்த வாசனை விடுமா? இன்னும் அந்தப் பழம் பசலிக் கதை யையேதான் பேசிக்கொண்டிருப்பேன். சுதந்தரம் வரு வதற்குப் பாடுபட்டவர்கள், அதை நாம் அநுபவிக்கத் தானே ஆத்ம சமர்ப்பணம் செய்தார்கள்? அநுபவிக்கக் கூசுகிறவ்ர்கள் இனிமேல் சுதந்தர இந்தியாவில் வாழத் தகுதி இல்லாதவர்கள் ! * -

உன்னுடைய சுதந்தர உணர்ச்சியைப் பாராட்டு கிறேன். அதோடுகூட கிர்மாண வேலையையும் செய் என்று தான் சொல்கிறேன். கொசுவைச் சங்காரம் செய்யும் வேல் யிலே கொஞ்சம் சிரத்தைகொள். கல்லே ஒவ்வொன்ருக வீசு. பாதையில் போகிறவர்கள் ஏதாவது சொல்வார்கள். நான் சொல்லவில்லையா? அவர்கள் பேச்சைக் காதில் வாங்' கிக்கொள்ளாதே. அவர்களெல்லாம் பழைய, மட்கிப்போய் வறண்டுபோன குருட்டு கம்பிக்கைகளின் கூட்டத்திலே நெளிந்துவந்த கர்நாடக மண்ணுங்கட்டிகள். அவர் பேச் சைச் சட்டை செய்தால் சுதந்தரம் வீணுகிவிடும். சுதந்தர மாக உன் கையையும் கண்ணையும் உபயோகப் படுத்து வதைத் தடுப்பவர் யார் தடுப்பது நியாயமா? அது சுதந்தரத்தை அடக்குவது ஆகாதா?. இந்த அடக்கு முறை தர்பார் 1947-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் 14-ஆம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/12&oldid=685919" இலிருந்து மீள்விக்கப்பட்டது