பக்கம்:சுதந்திரமா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்தாமா! む

தேதியோடு கவிழ்ந்துவிட்டது. இனிமேல் அப்படியெல்லாம் பூச்சாண்டி காட்டமுடியாது.

ஆம்; உன் இஷ்டம்போல் ஜமாய் கொசுவைக் கண் ேைல காண்டதற்கு உனக்குச் சுதந்தரம் இல்லையா ? அதைத் தொலைக்க வேண்டுமென்று சங்கற்பம் செய்து கொள்ளச் சுதந்தரம் இல்லையா ? அந்தச் சங்கற்பத்தைச் செய்கையில் காட்ட உனக்குச் சுதந்தரம் இல்லேயா ? மற்றவர்கள் உனக்கு உதவி செய்யாமல் இருக்கிரு.ர்கள்; நீ அவர்கள் போக்கைத் தடுத்து எனக்கு உதவி செய்யத் தான் வேண்டுமென்று சண்டித்தனம் செய்கிருயா? அப்படி ஒன்றும் இல்லையே! அவர்கள் குசாலாகப் போகிற வழியே போகட்டுமென்று அவர்கள் கடக்கும் சுதந்தரத்தை அது பவிக்கும்படி செய்கிருய். அவர்களுக்கும் சுதந்தரம் அளித்து யுேம் சுதந்தரத்தைப் பயன்படுத்திக் கொள்கிருய்.

அதோடு மற்ருெரு விஷயமும் ஞாபகத்துக்கு வரு கிறது. கி கல் வீசப் பழகிக்கொள்வது தேசத்துக்கே ஒரு முக்கியமான பலம். சுதந்தர இந்தியாவில் சுதந்தரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு மகத்தானது. அந்தப் பொறுப்பை நிர்வகிப்பது மிகவும் கடினமான காரியம். நம்முடைய விரோதிகள் எப்பொழுதடா அப்பா இதை லபக்கென்று வாயில் போட்டுக்கொள்ளலாமென்று காத்துக்கொண் டிருக்கிருள்கள். அங்கங்கே விஷமத்தை மூட்டிக்கொண்டு . வருகிருர்கள். அவர்க்ளுடைய தொல்லைகளிலிருந்து இந்தியா தேசம் பாதுகாப்பை அடையவேண்டும். காந்திமகான் கரடியாகக் கத்திலுைம் நாம் ராணுவச் செலவு பண்ணத் தான் வேண்டுமென்று தலைவர்கள் அப்பொழுதே சொன் ஞர்கள். இப்போது இந்தியாவின் படைப்பலத்தை அதிகப் படுத்துவதிலே கண்ணுக இருக்கிருர்கள். இளைஞர்கள் யாவரும் படைக்கலப் பயிற்சி பெறவேண்டுமென்று சொல் கிருர்கள். அடிமை இந்தியாவில் பிள்ளைகள் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/13&oldid=685920" இலிருந்து மீள்விக்கப்பட்டது