பக்கம்:சுதந்திரமா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சுதந்தா, !

கடைப்பிணமாக உருவாரமாக வாழ்ந்தார்கள் இனிமேல் அப்படி இருக்கக்கூடாது. சுதந்தா ஜீவன்பெற்ற இந்தியா வின் ஒவ்வொரு நாடியும் சுறுசுறுப்பாகத் துடிக்கவேண்டும் இளைஞர்கள் உள்ளம் துடிக்கவேண்டும். அவர்களுடைய கை, கால், உடம்பு, உள்ளம் எல்லாம் துறுதுறு வென்று துடிக்கவேண்டும். மண்ணுங்கட்டியாய், பிள்களப்பூச்சியாய், எருமைமாடாய் வாழ்ந்தது போதும். இளைஞர்களிடம் துடி துடிப்பு, சுறுசுறுப்பு, மிடுக்கு வலிமை, வீரம், உறுதி, துணிவு, அஞ்சாமை எல்லாம் பெருகவேண்டும். அப்போது தான் அவர்கள் படைப் பயிற்சி பெறத் தகுதியடைவர்கள். உன் கைதுறுதுறு வென்றிருப்பதற்கு அடையாளம் கல்லே வீசுவது. கொசுவின்மேல்கல்லே வீசத் தெரியாதவன் பகைவன்மேல் குண்டையா வீசப்போகிருன் கொசுவில் ஆரம்பிக்கும் பயிற்சி பகைவரை அழிக்கும் போர் வெற்றி யில் வந்து முடியும். சுதந்தரவாழ்வை கிரந்தரமாக வைத்துக்கொள்ளும் சக்திபெறுவதில் வந்து முடியும். சுதந்தரம் வந்தது. போய்விட்டது என்று சொல்லி ஏமாந்து போகாத நிலையில் வந்து முடியும்.

ஆகவே சுதந்தரத்தை உபயோகப்படுத்திக்கொள். "சுதந்தரமாக விளையாடு. கல்ல வீசிக் கொசுவைக் கொல். அதற்குக்கூட உனக்குச் சுதந்தரமில்லயா? இந்தச் சுதக் தரத்தை அடக்க யாராவது பைத்தியக்காரர்கள் குறுக்கிட் டால் இருக்கவே இருக்கிறது.மற்ருெரு சுதந்தரம், கூக்குர விடு: இன்னும் இரண்டு பேரைச் சேர்த்துக்கொண்டு கலாட்டா பண்னு வேலை கிறுத்தம் செய்துவிடு. எந்த வேலையை நிறுத்துவதென்ரு கேட்கிருய்?-யோசித்துக் கொண்டு வந்து சொல்கிறேன், தம்பி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/14&oldid=685921" இலிருந்து மீள்விக்கப்பட்டது