பக்கம்:சுதந்திரமா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைகறைத் துயில் எழு

" வைகறைத் துயில் எழு என்று ஒளவைப் பாட்டி சொல்லியிருக்கிருளே தெரியுமா? விடியற்காலையில் எழுங் திருந்தால் மூளை தெளிவாக இருக்கும். படிக்கிற் பொருள்க ளெல்லாம் பசுமரத்தாணிபோல மனசில் பதியும். எழுத ஆரம்பித்தால் புங்கானு புங்கமாக விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்ருகக் கிளம்பும்" என்று என் நண்பர் அரைமணி நேரம் உபங்கியாசம் செய்தார்.

'விடியற்காலையில் ஒருவிதமான பித்தமயக்கம் உண் டாகும். அதைச் சட்டைசெய்யாமல் எழுந்திருந்து ஸ்கான மும் செய்துவிட்டால் அப்புறம் வானத்தை வில்லாக வளைக்கலாம்; மன லேக் கயிருகத் திரிக்கலாம்' என்று அவர் விடியற்காலேயில் எழுவதன் பெருமையை அளந்து கொண்டே வந்தார். ஒவ்வொரு நிமிஷமும் எனக்குப் பச்சாத்தாபம் உண்டாயிற்று. என்ன காரியம் செய்கிருேம். எவ்வளவு நாட்களே விளுகத் தூங்கிக் கழித்துவிட்டோம்! என்ற எண்ணம் தோன்றியது. -

எப்போதும் உள்ள வேலைகளுக்கிடையே எதையாவது படித்து முடிக்கவேண்டுமென்ருல் நேரம் அகப்படுவதில்லை. ஆறேழு பக்கம் எழுதலாமென்ருல் கண்பர்கள் விடுகிருர் களா? நான் பிள்ளையார் சுழி போடுவது அவர்களுக்கு எப்படித்தான் தெரிகிறதோ? ஒரு பாரா எழுதியிருப்பேன்; ஒரு நண்பர் அவசர அவசரமாக வந்து சேருவார். அடுத்த வருஷத்தில் புளியமரங்கள் கிரமமாகக் காய்க்குமா? என்ற சர்ச்சையில் இறங்கிவிடுவார். இல்லாவிட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/15&oldid=685922" இலிருந்து மீள்விக்கப்பட்டது