பக்கம்:சுதந்திரமா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைகறைத் துயில் எழு 11

நாலுக்கே வைத்திருக்கிறேனே! அலாரச் சாவி கொடுக்க மறந்து விட்டேனென்று நினைக்கிறீர்களா? நிதானமாக இத்தனை சுற்று என்று கணக்குப்பண்ணிச் சாவி கொடுத்து விட்டேன். இனிமேல் நான் விடியற்காலம் எழுந்திருப் பதற்கு என்ன ஐயா தடை? -

"அலாரம் டைம்பீஸ் என்று என் கடிகாரத்தை வெறுமனே சொல்லி விடலாமா என்ன? கணிரென்று கேட்கும் அந்த அலாரத்தின் இன்னிசையே தனி மகிமை உடையது. தாக்க மயக்கத்தில் ஆழ்ந்து தாமத குணம் நிரம்பி அஞ்ஞானியாகக் கிடக்கும் எனக்கு, "இதோ. கான்கு மணியாகிவிட்டது; தூங்காதே எழுந்திரு, எழுந் திரு” என்று கணகண சப்தத்தால் உபதேசம் செய்வதற்கு

ஏற்ற கடிகாரம் அது. அது எனக்குக் கிடைத்திருக்கிற போது என்னுடைய விரதம் வெற்றிபெறுமென்பதில் என்ன சந்தேகம்?

ஞாயிற்றுக் கிழமை எட்டு மணிக்கே படுத்துக்கொண் டேன். தாங்கிவிட்டேனென்று கூடச் சொன்னேன் அல்லவா? ஆம், சுகமான உறக்கம்.

இரவு நேரம் போய்க்கொண்டிருந்த து. என் மனைவி எப்போது படுத்துக்கொண்டாளோ எனக்குத் தெரியாது. மணி ஒன்றன்பின் ஒன்ருகக் கழிந்து கொண்டே வந்தது. கான் சுழுத்தி அவஸ்தையில் எல்லாம் மறந்து துயின் - றேன். . . . . . . - -

விடியற்காலம் காலு மணியாகத்தான் இருக்க வேண்டும். கண கண கணவென்று மணியொலி கேட்டது: ஆளுல் மிக மெலிவாகக் கேட்டது. இனிமையான தூக்கத்தினிடையே அந்த ஒலி கேட்டதும் கேளாததுமாக இருந்தது. அந்தத் தாக்க மயக்கத்தில், எழுந்திருக்கலாமா என்ற பிரச்னை என் உள்ளத்தில் எழுந்தது. எதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/19&oldid=685926" இலிருந்து மீள்விக்கப்பட்டது