பக்கம்:சுதந்திரமா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சுதந்தரமா !

விணுக உடம்பைக் கெடுத்துக் கொள்ளவேண்டும்? அயர்ந்து துரங்குவதை விட்டு எழுந்து என்ன சாதிக்கப் போகிருேம்? அப்படி எழுந்திருக்க வேண்டுமானல் இன்னும் ஒரு மணி கழித்துச் சரியாக அஞ்சு மணிக்கு எழுந்திருக்கலாம் என்று ஒர் எண்ணம் தோன்றியது.

என்னுடைய விரதத்துக்குப் பங்கம் வருமே என்ற கருத்து எழுந்தாலும் அதற்குப் போதுமான பலம் இல்லை. . "இந்த இருட்டில் எழுந்திருந்து ஸ்நானம் செய்தால், காம் கம் தூக்கத்தைக் கெடுத்துக்கொள்வதோடு, அயர்ந்து துரங்கிக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் அநாவசிய மான தொந்தரவைக் கொடுக்க வேண்டியிருக்குமே என்ற பரோபகார சிந்தனை அடுத்தபடி கிளம்பியது. -

இப்படி ஒன்றுவிட்டு ஒன்று தோன்றிக்கொண் டிருக்கும்போது நித்திராதேவி மீட்டும் என்னே இறுகத் தழுவிக்கொண்டாள்; நான்கு மணி கடந்துவிட்டது. அலாரத்தை மறந்தேன். விரதத்தையும் மறந்தேன்.

ஐந்து மணி ஆயிற்று. வழக்கம்போல் எங்கள் வீட்டுத் தாத்தா எழுந்து, 'நாராயண, நாராயண' என்ற நாம. ஸ்மாணேயாகிய அலாரத்தை எழுப்பினர். அது என் காதில் விழுந்தது. ஐந்து மணியாகிவிட்டதென்ற ஞாபகம் உள்ளத்துக்குள்ளே மெல்லத் தோன்றிலுைம், தூக்கத்தின் மோகன சக்தி அதைத் தலையெடுக்க வொட்டாமல் அழுத் தியது. இருந்தாலும், இந்தத் தாத்தா ஸ்நானம் செய்தா கட்டும் நாம் எழுந்திருக்கலாம்" என்று ஒரு வகையாகச் சமாதானம் செய்துகொண்டேன். மறுபடியும் ஒரு பாட்டம் துரக்க சுகத்தை அதுபவித்தேன். . ... "

யாரோ என்ன எழுப்பினர்கள். வேறு யார்? என். மனேவிதான். 'மணி ஆறு ஆகிவிட்டது. இன்னும் எழுந்திருக்கவில்லையா? உங்கள் விரதம் என்ன ஆயிற்று'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/20&oldid=685927" இலிருந்து மீள்விக்கப்பட்டது