பக்கம்:சுதந்திரமா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைகறைத் துயில் எழு Í 3.

என்று கேட்டாள். அவள் இன்ன வார்த்தைகளேத்தான் சொன்னுள் என்று தெளிவாக எனக்குப் புலப்படவில்லே. வேறு பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டேன். கால் தலே யணேயை இரண்டு முழங்காலுக்கும் இடையே வைத்துக் காலே முடக்கிக்கொண்டு போர்வையையும் இழுத்துப் போர்த்தேன். அவள் என் துரக்கத்தைக் கண்டு என்ன சொன்னளோ, எப்படிப் பரிகாசம் செய்தாளோ, யார் கண்டார்கள்? அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தூங்கினேன்.

கண்ணே விழித்துப் பார்த்தேன் சூரியன் வான வெளியில் தன் யாத்திரையைத் தொடங்கி விட்டான். கண்ணேக் கசக்கிக் கொண்டு எழுந்திருந்தேன்; மணி. ஏழரை. நான் ஆறரை மணிக்கு எழுந்திருப்பவன்; அன்று என் சங்கற்ப விசேஷம், ஒரு மணி பின்னும் தாமதமாக எழுந்தேன் ! - - . -

என் மனைவி வந்து கின்ருள். ' பிராதஸ்நான மெல்லாம் ஆகிவிட்டதா?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

' என்ன இருந்தாலும் பெரியவர்கள் வாக்கு வேத வாக்குத்தான்; சத்தியமானது.” என்றேன். அவள் ஒன்றும் விளங்காமல், ' என்ன உளறுகிறீர்கள்? இன்னும் தூக்க மயக்கம் விடவில்லையோ?" என்ருள்.

'விடியற் காலத் தூக்கம் வெல்லம் போலே என்ற பழ மொழியைச் சொன்னரே, அந்த மகானுபாவர் வாயில் வெல்லத்தைத்தான் போடவேண்டும்” என்று சொல்லிக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தேன்.

அந்தப் பழமொழி என் மானத்தைக் காப்பாற்றியது. இல்லாவிட்டால்- . . . . . . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/21&oldid=685928" இலிருந்து மீள்விக்கப்பட்டது