பக்கம்:சுதந்திரமா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவுக் கஃ 15

காக்கு என்ற ஒன்று இல்லாவிட்டால் மனிதன் சோற்றை அரைத்து உள்ளே செலுத்தும் யந்திரமாகி இருப்பான். நல்ல வேளை, கடவுள் காப்பாற்றினர். காக்கு என்னும் கலைஞன் இந்தச் சாப்பாட்டுக் கலையின் தலைவன். அவன் செய்யும் விமரிசனம் அபாரம். உணவுக்குச் ങ്ങള് உண்டு என்பதை உணர்கிறவன் அந்தக் கலைஞன்.

ஆறு வகையான சுவைகள் என்று ஒருவாறு வரையறை ஏற்பட்டிருக்கிறது. -

சங்கீதத்தைக் குறிப்பிடும்போது தமிழ்க் கவிஞர்

ஏழிசை யென்று சொல்வார்கள். சர்வலோகத்திலுள்ள

பண்டங்களும் விஞ்ஞான ரீதிப்ப்டி 93 மூலப்பொருள்களில் அடங்குவது போலவும், ஞானசாஸ்திரங்களின்படி 96

தத்துவங்களில் அடங்குவது போலவும், சங்கீதத்தின்

பரப்பு முழுவதும் மூலஸ்வரங்களாகிய ஏழில் அடங்கி

விடுகின்றனவாம். ஆகையால் ஏழிசை என்று சொல்

கிரு.ர்கள். . . . . .

ஆளுல் ஏழு ஸ்வரங்களில் எத்தனையோ பேதங்கள். மூன்று ஸ்தாயிகளுக்கு 21 ஸ்வரங்களாகின்றன. அந்த இருபத்தொன்றிலும் எத்தனையோ மயிரிழை துணுக் கங்கள். முன்பு ஆதியாம் என்று ஒரு வீணே தமிழ் நாட்டில் இருந்ததாம். அதற்கு ஆயிரம் நரம்புகள் உண்டாம். ஒவ்வொரு நரம்புக்கும் ஒவ்வோர் ஒலி. ஸ்வர பேதத்தை நுணுகி நுணுகி ஆராய்ந்துகொண்டு போனல் ஆயிரமென்ன? பதியிைரம், லக்ஷம் என்று விரிந்துகொண்டு போகும். -

எழு ஸ்வரத்துக்கு எப்படி எல்லே இல்லையோ அப்படித்தான் ஆறு சுவைக்கும் எல்லே இல்லை. இனிப்பு ஒரு சுவைதான். ஆனல் எல்லா இனிப்பும் ஒன்ருகுமா? கரும்பின் இனிப்பும் தேனின் இனிப்பும் ஒன்ருகிவிடுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/23&oldid=685930" இலிருந்து மீள்விக்கப்பட்டது