பக்கம்:சுதந்திரமா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - சுதந்தாமா!

கரும்பு கரும்புதான், தேன் தேன்தான். மாம்பழத்தின் சுவையும் மணத்தக்காளிப்பழத்தின் சுவையும் இனம் பிரிக்கும்போது தித்திப்பு என்ற பிரிவில் வருகின்றவையே. ஆனல் இரண்டுக்கும் வித்தியாசம் இல்க்லயா? ... -

பாகற்காயின் கசப்பும் எட்டிக்காயின் கசப்பும் ஒன்றென்று சொல்லலாமா? வாழைக்காயின் துவர்ப்பும் பலாக்காயின் துவர்ப்பும் ஒரே சுவையாக எண்ணலாமா? -

தனித்தனிச் சுவை கிடக்கட்டும். இரண்டு மூன்று சுவைகள் சேர்ந்த பண்டங்கள் இய்ற்கையிலே எத்தனை இருக்கின்றன. மாம்பழத்தில் வெறும் இனிப்பு மாத்திரமா இருக்கிறது? புளிப்பும் சேர்ந்திருக்கிறது. இப்படி இயற் கையிலே உள்ள கலப்புப் போதாதென்று நாமும் பல சுவைகளையும் கூட்டி வெவ்வேறு பதார்த்தங்களைச் செய்து சாப்பிடுகிருேம் இயற்கையிலே கசப்பான பாகற் காய்க்கு வெல்லம் போட்டுக் கறி பண்ணிச் சாப்பிடுகிருேம். புளிப்பும் இனிப்பும் உள்ள மாம்பழத்துக்குக் காரமும் உப்பும் சேர்த்துப் பச்சடி பண்ணிச் சாப்பிடுகிருேம்.

மனிதன் ஒவ்வொரு நாளும் மூச்சு விடுகிறது, தண்ணிர் குடிப்பது என்ற இரண்டுபோக, அடுத்தபடி அவசியமாகச் செய்யும் காரியம் உண்ணுதல் முச்சுக் காற்றுக்கும் தண்ணிருக்கும் அவன் செயற்கையிலே ஒன்றையும் சேர்ப்பதில்லை. உணவு விஷயத்தில் தான் பலபல வேலைப் பாடுகளைச் செய்கிருன் ஏன், தண்ணீரைக் கூட் அவன் கம்மா விடுவதில்லை; ஏலம் போடுகிருன் விளாமிச்ச வேர் பேர்டுகிருன் பழச்சத்தைச் சேர்க்கிருன்.

உணவைக் கலப் பொருளாக்க அவ்ன் எத்தனை பாடு படுகிருன் என்பதைக் கொஞ்சம் கவனிக்கலாம். உணவைச் சேகரிக்க அவன் படும் பாடு ஒரு பக்கம் இருக்கட்டும். உணவைச் சுவையுடையதாகப் பண்ண் அவன் செய்யுங்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/24&oldid=685931" இலிருந்து மீள்விக்கப்பட்டது