பக்கம்:சுதந்திரமா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவுக் கலே 19

ஆசை கிளம்பும். இந்தத் தந்திரத்தைத் தெரிந்து ஹோட்டல்காரர்கள் புதிய புதிய தின்பண்டங்களைப் புதிய புதிய உருவத்தோடும் நிறத்தோடும் உண்டாக்குகிருர்கள். நல்ல சித்திரக்காரன் ஒருவன் தான் எழுதும் பிரதானமான உருவத்துக்கு கிலேக்களமாக அழகிய காட்சிகளே அமைப் பது போல இந்தக் கலைஞர்களும் ஹோட்டல் வாசல், சுவர், தரை, மேற்கட்டி, அலமாரி ஆகிய கிலேக்களங்களை மிகவும் கவர்ச்சி தரும்படி அமைத்திருக்கிருர்கள்.

விட்டிலே விருந்து நடக்கும்போது எத்தனே நிறமான பதார்த்தங்களேக் காண்கிருேம் சித்திரான்னங் களின் விசித்திர வர்ணங்களைச் சாப்பிடுவதற்கு முன்பு கண்டு மகிழ்வதற்காக வல்லவா வைத்திருக்கிரு.ர்கள்?

உணவுக்கலையில் கண்ணுக்கு இனிமை, காட்சியுணர்ச் சிக்குத் திருப்தி, உண்டாக்குவதும் முக்கியமானதல்ல வென்று இப்போது சொல்வீர்களா ? .

அடுத்தபடி ஸ்பரிசம் 'குடாக ஒரு கப் காபி' 'சுடச் தடத் தோசை", "சூடாக என்ன இருக்கிறது?’ என்ற பேச்சை ஹோட்டலில் கேட்டவர்களுக்கு உணவுக் கலையில் ஸ்பரிசத்துக்கும் ஒரு பங்கு உண்டு என்ற உண்மை தெரிய வரும். ஐஸ்கிரீம், ஐஸ்மோர் முதலிய பண்டங்களிலே குளிர்ச்சிக்கு மதிப்பு. குளிர்ச்சி என்பது ஸ்பரிச உணர்ச்சி தானே? மெதுவடையும் மெதுவான இட்டிவியும் வேண்டு மென்னும் ரஸிகர்கள் அந்த ஸ்பரிச உணர்ச்சியைக் கொண்டுதானே மகிழ்கிறர்கள்?

வாசனை: அது மூக்கின் வேலே. உணவுப் பண்டங் களில் வாசனே வேண்டுமா வேண்டாமா? விருந்துச் சமையவே மோப்பம் பிடித்துக் கண்டு பிடிக்கும் உணவுக் கலைஞர்களே க்கேட்டுப் பாருங்கள் சொல்வார்கள். உணவுக் கஜலக்கும் வாசனைக்கும் சம்பந்தம் இல்லே யென்ருல், ஏலத் துக்கும், குங்குமப் பூவுக்கும், பன்னிருக்கும் சமையற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/27&oldid=685934" இலிருந்து மீள்விக்கப்பட்டது