பக்கம்:சுதந்திரமா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O சுதந்தரமா!

கூடத்தில் என்ன வேலை? காபியை நல்ல காபியென்று அதன் ஜோரான வாசனையல்லவா சொல்கிறது? நெய்யின் உயர்வை காக்கா தெரிவிக்கிறது? மணமான நெய் வேண்டு மென்று கேட்கிருேமா, தித்திப்பான நெய் வேண்டு ம்ென்று கேட்கிருேமா?

காக்கு, கண், ஸ்பரிச இந்திரியம், மூக்கு என்னும் நான்குக்கும் கவர்ச்சி உண்டாக்கும் உணவின் திறத்தைப் பார்த்தோம். காதுக்கு மாத்திரம் உணவு விஷயத்தில் வேலை இல்லை யென்று இப்போது தோன்றுகிறது. அதையும் கொஞ்சம் பார்த்து விடுவோமே! - -

இந்தக் காலத்தில் ரேடியோ இல்லாத ஹோட்டல் எங்காவது இருக்கிறதா? ஹோட்டலுக்கும் ரேடியோவுக் கும் என்ன ஐயா சம்பந்தம்? சம்பந்தம் இல்லாமல் ஹோட்டல்காரர். அவ்வளவு ரூபாய் செலவழித்து ரேடியோ வாங்கி வைக்கப் பைத்தியமா பிடித்திருக்கிறது? ரேடியோ ச ங் கீ த ம் நேரடியாக நம்முடைய வயிற்றிலே உணவாகப் புகுவதில்லை. இட்டிலியைத் தனியாகச் சாப்பிட்டு விடலாம்; பசி திரும். ஆனல் அதற்குச் சட்டினி வேண்டுமென்று கேட்கிருேம். பெரிய சுவைக்குச் சிறிய சுவை அதுபானமாக உதவுகிறது. நிறம், மணம், குடு ஆகியவைகளும் உணவை உட்கொள்ள உபயோகமாகும் கருவிகளாகின்றன. அப்படியே ஹோட்டல் அலங்காரங் கள் வயிற்றுக்குள் போகவேண்டிய பதார்த்தத்தை அப்படிப் போகும்படி செய்ய உதவுகின்றன. வாசல் அலங் காரம் முதல் இட்டிலியின் சட்டினியிலுள்ள நல்ல தேங் காய்வரை நம்முடைய வயிற்றுக்குள் இட்டிலியைத் தள்ளப் பிரயாசைப் படுகின்றன. ஒவ்வொன்றும் ஒரே மாதிரி வேலை யைச் செய்யவில்லை. அவ்வளவும் அவசியம் என்ற கியதியே இல்லை. வெறும் மாவைத். இன்றுகூடக் கடும் பசியை அப்போதைக்குத் தணித்துக் கொள்ளலாம். உலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/28&oldid=685935" இலிருந்து மீள்விக்கப்பட்டது