பக்கம்:சுதந்திரமா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவுக் கலே 21

அப்படி கினேப்பதில்லேயே ஒரே வயிற்றுக்குள்ளே போவதாக இருந்தாலும், பசி தணிக்கும் விஷயத்தில் அத்தனே முஸ்தீபுகளுக்கும் நேரடியான வேலை இல்லா விட்டாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டம் வரையில் உதவுகின்றது. ஹோட்டலுக்குள் நுழைய வாசல் அலங் காரம் உதவுகிறது; அதற்குப் பிறகு அதன் வேலை நின்று விடுகிறது. உட்காரும்படி நாற்காலி அழைக்கிறது. பட்சணத்தின் நிறம் விரும்பச் செய்கிறது. அதன் ஸ்பரிசம் கையில் எடுக்கச் செய்கிறது. சுவை வாயில் சுவைக்கச் செய்கிறது. வாயில் போடும் வரைக்கும் கிறத்துக்கு வேலை உண்டு. வாயில் போட்ட பிறகு சுவைக்கு வேலை தொண் டைக்குள் போய்விட்டால் இத்தனேக்கும் வேலே இல்லை.

ஒவ்வொரு கட்டத்தில் கின்று உதவும் கருவிகளில்

ரேடியோ சங்கீதம் ஒன்று. மனைவி இனிமையாகப் பேசிச் சாப்பாடு போட்டால் இரண்டு கவளம் கூடச் செல்கின் றன; அங்கே அந்தப் பேச்சின் இனிமைக்குக் கெளரவம் இல்லையா? குழந்தைக்குப் பாட்டும் கதையும் சொல்லிக் கொண்டே சோறு ஊட்டும் பாட்டிக்கு, இந்தத் தந்திரம் தெரியும் குழந்தையின் காதுக்கு உணவூட்டி அந்தச் சுவாரசியத்திலே வாய்க்கு உணவூட்டுகிருள். அவள் பாட்டுக் கேட்ட குழந்தைகளாகிய நாம் இப்போது ரேடியோப் பாட்டுக் கேட்டுக் கொண்டே, இன்னும் ஒரு முறுகல் தோசை என்று கேட்கிருேம்.

உணவுக் கலையில் ஐந்து இந்திரியங்களுக்கும் வேலை உண்டென்பதற்கு இன்னும் உதாரணங்கள் எதற்கு? ஆகவே, "இந்திரியங்கள் படைத்ததும் வாழ்நாள் படைத் ததும் வெறுமனே விலங்குபோலச் சாப்பிடுவதற்கல்ல, உணவை ரஸிப்பதற்கு உணவுக் கலையின்பம் பெருவதற்கு" என்ற முடிவுக்கு நாம் வருவதில் ஏதாவது பிசகு உண்டா? இருந்தால் சொல்லுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/29&oldid=685936" இலிருந்து மீள்விக்கப்பட்டது