பக்கம்:சுதந்திரமா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேணுப் பைத்தியம் 25

படியோ நெற்றி வேர்வை நிலத்தில் விழச் சிரமப்பட்டு ஒட்டினேன். மைவிட்டு எழுதினுல், முள்மாதிரி காகிதத் தில் குத்திக் கொள்கிறது. இல்லாவிட்டால், பொட்டுப் பொட்டாக மையைக் கொட்டுகிறது. மறுபடியும் ரிப்பேர் செய்தேன்; எழுதினேன். மூன்ருமுறை ரிப்பேர் செய்யும் போது பேஞ காக்கு ஒன்று உடைந்து போயிற்று. அப் புறம் அந்தப் பேணுவை என்ன் செய்வது ? கொலுவிலே பழம் பேளுவை வைக்கும் வழக்கம் இன்னும் மைக்கு வர வில்லேயே - -

பிறகு வேருெரு பேணு வாங்கினேன். அப்போது நான் தெரிந்துகொண்ட பேணு உலக மர்மம் ஒன்று. என் கண் பர் மூலம் அதை அறிந்துகொண்டேன். 'கண்ட கண்ட மையையெல்லாம் பேணுவுக்குப் போட்டால் கெட்டுப் போகும். காசு போகிறதென்று பார்க்கக்கூடாது. பார்த் தால் முதலுக்கே மோசம் வந்துவிடும்” என்று சொன்னர். 5ான் முன்பு வாங்கினதைவிட உயர்ந்த பேணுவைத்தான் வாங்கியிருந்தேன். குதிரை வாங்கினவன் சவுக்கு வாங்க யோசிப்பான : மார்க்கட்டில் உள்ள உயர்ந்த மையை

வாங்கித்தான் பேணுவுக்குப் போட்டேன். -

நாலு நாள் என்ருக எழுதியது. ஐந்தாவது நாள் பேணுவிலிருந்து மை தாராளமாக வரவில்லை. "பேளுவைத் திறந்து வைத்திருப்பிர்கள். மை கட்டி தட்டி அடைத்துக் கொண்டிருக்கும். எல்லாவற்றையும் கழற்றித் தண்ணிரில்

ஊறப் போடுங்கள். பிறகு சரியாகப் போய்விடும்" என்று. ஒருவர் வைத்தியம் சொன்னர் செய்து பார்த்தேன். கொஞ். சம் சுமாராக எழுதியது. ஆனல், மறுமுறை மை போடக் கழற்றில்ை வரவில்லே. கழுத்தை அழுத்தித் திருகிப் பார்த்தேன். இறுகலாக இருந்தது. மறுபடியும் ஒரு கண்ட ரின் உபதேசம் உதவியது. விளக்கில் காட்டில்ை வந்து விடும்" என்ருர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/33&oldid=685940" இலிருந்து மீள்விக்கப்பட்டது