பக்கம்:சுதந்திரமா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேணுப் பைத்தியம் 27

விரைவிலே விட்டுவிடுவான். அதுமாதிரிதான் இருக்கிறது விலைபெற்ற பேனவை வாங்கின என் பிழைப்பும். 'பேன எப்படி ஸார் எழுதுகிறது?’ என்று என் பேணுவைப் போல் வாங்கின. ஒருவர் கேட்டால், 'கன்ருகத்தான் எழுது கிறது” என்று சொல்கிறேன். "என் பேணுவில் மை தாராளமாக வரமாட்டேன் என்கிறது” என்று அவர் சொல்லுகிருர். அவர் கம்மைச் சேர்ந்தவர் என்று தெரிந்த பிறகு ஆறுதல் உண்டாகிறது. உண்மையும் வெளிவரு கிறது. "ஆமாம் ! என் பேணுக்கூடச் சில சமயங்களில் சரியாக எழுதுவதில்லே' என்று சொல்லுகிறேன்.

பாதி எழுதுகையில் பே ைஇடக்குப் பண்ணும்போது நமக்கு வரும் கோபம் திரிபுராந்தகனுக்குக்கூட வராது. என்ன செய்வது? பொறுமையோடு பேணுவைச் சுத்தம் செய்து எழுதிப் பார்க்கிறேன். இல்லாவிட்டால் பேசாமல் போட்டுவிடுகிறேன். இந்தச் சங்கடத்துக்காக இரண்டு பேனவாக வைத்துக் கொண்டிருக்கிறேன். அப்போதும் தகராறுதான். மரக்கட்டைப் பேணுவுக்குச் சமானமே இல்லை" என்று எத்தனையோ தடவை சொல்வி யிருக் கிறேன்; இனியும் சொல்வேன்; ஆலுைம், பத்திரிகையில் புதிய பேணு விளம்பரம் வந்தால் அதை வாங்கலாமா என்று சபலம் தட்டுகிறது. ஒரு பேணுப் போய் இரண்டு பேன. வந்தும் திருப்தி உண்டாகவில்லை. உட்கார்ந்தோம், தடையின்றி எழுதினேம் என்று சொல்ல இடமில்லை. மூன்ருவது பேணு வாங்கலாமா என்று யோசிக்கிறேன். மூன்றென்ன, முப்பது வாங்கிலுைம் இந்தப் பைத்தியம் திருமென்ற கம்பிக்கை எனக்கே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/35&oldid=685942" இலிருந்து மீள்விக்கப்பட்டது