பக்கம்:சுதந்திரமா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் விரும்பும் நோய்

உங்களுடைய பிள்ளைகள்ல் யார் நல்லவன்? என்று தகப்பைைர ஒருவர் கேட்டார்.

அதோ கூரையைப் பிய்த்துக் கொண்டிருக்கிருனே, அவன்தான்” என்று அந்தத் தந்தை சுட்டிக் காட்டினராம். பிள்ளைகளுடைய ஸ்வபாவம் தெரிந்திருந்தால் அந்த நண்பர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. -

ஆனல் நான் சொல்லும் விஷயம் அப்படிப் பட்டதல்ல. " வியாதிகளுக்குள் நல்ல வியாதி எது? " என்று நீங்கள் கேட்க வேண்டும். ' வியாதிகளுக்குள் மிகவும் நல்ல வியாதி, உபகாரமான வியாதி, ஜுரந்தான்” என்று தங்கு தடையில்லாமல் நான் சொல்லி விடுவேன். ஆம்: ஜூரத்துக்கு கல்ல வியாதி என்று ஒரு பெயர் கூடக் கொடுத்து விடலாம். பாம்புகளில் நல்ல பாம்பு இல்லையா? அம்மைக்கு மாரியம்மன் தெய்வம் என்று கேட்டிருப் பீர்கள். வைத்திய சாஸ்திரத்துக்கும், சிகிச்சைகளுக்கும் அப்பாற் பட்டது அம்மை. ஆகையால் அதை வியாதிகளின் வரிசையிலேயே சேர்க்கக் கூடாது. ஜூரத்துக்குக்கூட ஒரு தேவதை உண்டு. திருச் சாட்டியக்குடி யென்றஸ்தலத்தில் அதற்குக் கோயில் இருக்கிறதாம். நம் முன்னேர்கள் தெரியாமலா ஜுரத்தைத் தெய்வமாகப் பாராட்டினர்கள்? தலைவலிக்குத் தெய்வமில்ல. வயிற்று வலிக்குத் தெய்வ மில்லை. ஜூரத்துக்கு மாத்திரம் கடவுளே வைப்பானேன்? அதிலே குகடிமம் இருக்கிறது. ஜூர நோயின் உயர்வைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/36&oldid=685943" இலிருந்து மீள்விக்கப்பட்டது