பக்கம்:சுதந்திரமா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான் விரும்பும் நோய் 31

உலகம் மாறுகிறது; காலம் மாறுகிறது; மனிதர். பிராணிகள், ஆறு, மலே-எல்லாம் மாறுகின்றன. எல்லாம் சில நிமிஷ நேரங்களில் செய்யும் பிரயாணம்.

இந்தா அப்பா, கஞ்சி குடிக்கிருயா?" என்று அம்மா கேட்கும் போதுதான் காம் பூவுலகத்திற்கு வருகிருேம். எத்தனையோ மைல்கள் பிரயாணம் செய்த நமக்குக் களைப்பாக இருக்கு மென்று எண்ணித்தான் நம்முடைய தாய் கஞ்சியை வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிருள்!

'அஞ்சு கிமிஷமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன். மயக்கமாக இருந்ததோ ? பயமாய்ப் போய் விட்டதே' என்று அவள் அங்கலாய்க்கும் போதுதான் கமக்காக அவள் காத்திருப்பது தெரிய வருகிறது. -

மயக்கமா! சட்! யார் சொன்னது? நாம் எவ்வளவு துாரம் விமானத்திலே பிரயாணம் செய்து விட்டு வருகிருேம் இவ்வளவு தூரம் போய்வர இந்தச் சிறிது நேரம் ஆனது ஒரு பிரமாதமா? - -

இந்த மாதிரியான இன்ப அநுபவங்களே எந்த வியாதி ஐயா தருகிறது? தலேவலி தருமா? கண்வலி கொடுக்குமா? ஜூரம் ஒன்றுதான் தரும். ஆகவேதான் அது வியாதி களுக்குள் விரும்பத் தக்கது என்று சொல்லுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/39&oldid=685946" இலிருந்து மீள்விக்கப்பட்டது