பக்கம்:சுதந்திரமா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் போற்றிய பொடி - 39

மங்களிலும் பொடியும் புகையிலையும் புகுந்துகொண்டிருப் பதும் ஒரு காரணம் என்று சொல்லலாம். நாகரிகம் என் பது நகரத்திலே உண்டாக வ்ேண்டும். அங்கிருந்து அது பிறகு கிராமத்துக்குச் செல்லும்.

புகை குடிப்பதே நாகரிகத்தின் அம்சம் என்று சொல்ல வும் முடியாது. பீடியும் புகையிலைச் சுருட்டும் புகை குடிக் கும் வழக்கத்தில் கீழ்ப்படியில் இருப்பவை. அவற்றைக் குடிப்பவர்களே காகரிகக் கனவான்களாகக் கருதுகிருேமா ? இல்லையே! அந்த இரண்டும் சிகரெட்டைப்போல விலை உயர்ந்த பொருள்கள் அல்ல.

பொடிப் பழக்கம் தமிழ் காட்டில் மிகவும் பரவி யிருக் கிறது. மற்ற நாட்டைப்பற்றி எனக்குத் தெரியாது. தெரி யாத விஷயத்தில் புகுந்துகொண்டு அல்லல்படுவானேன்? அதுவும் ஒரு பொடி விஷயத்திற்காக! .

பொடி, புகைச்சுருட்டு ஏற்பட்ட பிறகே ஏற்பட் டிருக்க வேண்டும் புகையிலே என்ற பெயரே அந்த இலை முதல் முதலாகப் புகை குடிக்க உதவியது என்ற உண்மை யைத் தெரிவிக்கிறது. சுருட்டுக் குடிக்கும் வழக்கந்தான் முதலில் இந்த நாட்டில் உண்டாகி இருக்கவேண்டும். தெலுங்கு தேசத்தில் சுருட்டுக் குடிக்கிறதை அனாசார மாகக் கருதுவதில்லை. இங்கே வைதிகர்கள் பொடி போடு கிரு.ர்கள், புகையிலே போடுகிருர்கள்; ஆல்ை சுருட்டுக் குடிப்பதில்லை. புகையிலேயை மூன்று ரூபங்களில் உபயோ கிக்கும்போது அதற்குப் பெயரைத் தந்த முதல் உபயோக

மாகிய புகை குடிப்பதை மாத்திரம் அகாசாரமென்று: விலக்குவானேன்? - - - - புகை குடிக்கும்போது சுருட்டை வாயில்ை குடிக் கிருேம். கையிலே பற்றிக் கொள்கிருேம். அது எச்சில் அல்லவா? புகையிலே இங்கே புகுந்த காலத்தில் சுருட்டாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/47&oldid=685954" இலிருந்து மீள்விக்கப்பட்டது