பக்கம்:சுதந்திரமா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&O சுதந்தரமா!

உபயோகப்பட்டது. அதன் மனேரம்யமான ம்ணம் எல் லோரையும் ஆட்கொண்டது. தாங்களும் குடிக்கவேண்டு மென்று நினைத்தார்கள். ஆ ைல் எச்சில் பண்ண வேண்டுமே! சரி, புகையைக் குடிப்பதைவிட ரஸத்தைக் குடிக்கலாமென்று ஒருவர் ஆரம்பித்தார். பிறகு புகை யிலே போடுதல் வழக்கத்துக்கு வந்துவிட்டது ! .

புகையிலையை வாயிலே போட்டால் கொஞ்சம் மயக்கம் வருகிறது. அது பிடிக்காத சிலர் அதன் அற்புத மணத்தை மாத்திரம் அநுபவிக்க எண்ணினர்கள். அடுத்த விளைவு பொடி, -

சொக்குப் பொடி என்று. ஏதோ ஒன்று இருக்கின்ற தாம். அதைப்போட்டு மயக்கலாம் என்று சொல்வார்கள். மூக்குப் பொடிதான் இந்தக் காலத்துச் சொக்குப் பொடி.

காதலன் காதலியரிடையே உள்ள அன்பின் திறம் அவர்கள் சேர்ந்து வாழும்போது அவ்வளவு தென்படாது. அவர்கள் பிரிந்திருக்கும்போது பார்க்க வேண்டுமே, அவர் கள் படும் அவஸ்தையை அப்போதுதான் கவிகளுக்குக் காவியம்பாடச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அது போலத்தான் பொடியின் மகத்துவத்தை அது கிடைக்காதபோது பொடிக்காதலர் படும் வேதனையைக் கண்டு தெரிந்து கொள்ளலாம். - - - -

யாரோ ஒரு ராஜா குதிரையின்மீது போய்க் கொண் டிருந்தார்ாம். நடு வழியில் பொடி டப்பியை எடுத்தார்: பொடி இல்லை. பக்கத்தில் வருபவர்கள் பொடிபோடும் பழக்கம் இல்லாதவர்கள். ராஜாவுக்கு ஒன்றுமே ஒடவில்லை. குதிரை போய்க் கொண்டிருந்தது. ஆலுைம், லகானப் பிடிக்கக் கையில் திராணியில்லை. ஒரே ஏக்கமாக ஏங்கிச் சோர்ந்து வாடியிருந்தபோது, அவர் திடீரென்று குதிரையை சிறுத்திக் கீழே குதூகலத்தோடு துள்ளிக் குதித்தார். மற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/48&oldid=685955" இலிருந்து மீள்விக்கப்பட்டது