பக்கம்:சுதந்திரமா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் போற்றிய பொடி 牟t

வர்களெல்லாம் ஆச்சரியத்தில்ை ஒன்றும் தோன்ருமல் விழித்தார்கள். பக்கத்தில் ஒரு வயலில் யாரோ உழவன் உழுதுகொண்டிருந்தான். வெகு விரைவாக அரசர் அவ னிடம் ஓடினர். அப்போதுதான் அவன் தன் பொடி மட்டையிலிருந்து ஒரு சிட்டிகைப் பொடியெடுத்து உறிஞ்சி இடுப்பில் செருகிக் கொண்டிருந்தான். 'ஐயா, ஐயா, இங்கே ஒரு சிட்டிகை போடும்" என்று பல்லேக் காட்டிக் கொண்டு அவன் முன்னே அரசர் கின்ருர். அவன் பொடி மட்டையையே எடுத்துக் கொடுத்து விட்டான். அந்த நாசிகாமிர்தம் உள்ளே போனபிற்பாடுதான் அரசருக்கு நல்ல உணர்வு வந்தது. பொடிகொடுத்த அந்த உழவனுக்கு ராஜா பிறகு ஒரு ஜாகீரையே கொடுத்தாராம்.

ராஜாவும் உழவலுமே எங்கும் இருக்கிருர்களா? கலெக்டர் சேகவனிடம் பொடி வாங்கிப் போட்டுக் கொள் கிருர் வாத்தியார் இந்தக் காலத்தில் மாளுக்கனிடம் பொடி வாங்கிப் போடுகிருர், எஜமான் தொழிலாளியிடம் கையை நீட்டுகிருர். பொடியைப் போலச் சமதர்ம உணர்ச்சியை உண்டாக்கும் பொருள் உலகில் வேறு ஒன்று இருக்கிறதா? ஒரு பழைய புலவர்'புகையிலே விடுதூது"என்ற தமிழ்ப் பிரபந்தத்தில் புகையிலேக்கு உள்ள மாகாத்மியத்தை யெல்லாம் சொல்கிருர் அரசன் உழவனிடம் கையேந்தி நிற்பது பெரிதல்ல. மற்றவர்களிடம் தன்னுடைய வாக்குச் சாதுரியத்தைக் காட்டி வெல்லும் காவலன் இருக்கிருனே, அவன்கூடப் பொடி இல்லாதபோது கையை நீட்டிக் காட்டுகிருளும் சொல்லாற்றலேக் காட்டும் துடியான பேர்வழிகளைக்கூட ஊர் பேர் தெரியாதவர்களிடம் பல்லேக் காட்டும்படி வைத்து விடுகிறது. புகையிலை. - - சொற் காட்டும் நல்ல - - துடிகாரர், ஆரையும்போய்ப் . . . . .” பற் காட்ட வைத்த பழி காரா! என்பது அவர் பாட்டு, - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/49&oldid=685956" இலிருந்து மீள்விக்கப்பட்டது