பக்கம்:சுதந்திரமா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.2 சுதந்தரமா !

புலவரே தம்முடைய் சொந்த அநுபவத்திலே பல்லேக் காட்டிக் கேட்டிருப்பார். இல்லாவிட்டால் இவ்வளவு தெளிவாகச் சொல்ல வருமா? அவரே சொல் காட்டும் கல்ல. துடிகாரர் ஆயிற்றே! -

ஆனல் 'பழிகாரர்' என்று வைதிருக்கிருரே, ஏன்?

அது வசவு அல்ல. அதிகச் சந்தோஷம் வந்துவிட்டால் சில பேருக்கு இந்த மாதிரி வார்த்தைகள் வரும். சங்கீத வித்துவான் கன்ருகப் பாடுகிருர் மிகவும் ரசமான கட்டத் தில், "ஐயோ !" என்று சொல்கிறவர்கள் இல்லையா? " எப்படிப் பாடினர்?" என்று கேட்டால், 'கொன்னுட் டான் போ' என்று சொல்பவர்களே நாம் கேட்டதில்லையா? தம் குழந்தை அருமையாக இரண்டு வார்த்தைகள் சொல்லி விட்டால் அமிதமான சந்தோஷத்தில், "சீ போக்கிரி, 5ாயே!” என்று கொஞ்சுகிருர்களே, அப்போது அவர்கள் குழந்தையை வையவா வைகிருர்கள்? இல்லை. அந்த வார்த்தைகள் சந்தோஷத்தின் உச்சஸ்தாயியிலே வருகின் றன. அப்படித்தான், சொந்த அநுபவத்தினல் பொடி மகத்துவத்தை அறிந்த புலவர் பேசுகிருர், "பழிகாரா!' என்பது, சொற்களேயெல்லாம் கடந்து நிற்கும் அவர் உவகையைக் காட்டும் அடையாளம்.

- சொற்காட்டும் நல்ல -

- துடிகாரர், ஆரையும்போய்ப்

பற் காட்ட வைத்த பழிகாரா!

என்பது புகையிலக்கு அவர் பாடும் மெய்க்கிர்த்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/50&oldid=685957" இலிருந்து மீள்விக்கப்பட்டது