பக்கம்:சுதந்திரமா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சுதந்தரமா !

விட்டதே! என்ன முட்டாள் தனம் பாருங்கள். இங்கே

இருந்த புத்தகங்களேப் புரட்டிக் கொண்டு இருந்து

விட்டேனே சரி, நான் வருகிறேன். புத்தகங்களே

அடுக்கி வைக்காமல் போகிறேனே என்று கோபம்

கொள்ளாதீர்கள் ' என்று போய்விடுவார்கள்.

கொள்ளு என்ருல் வாயைத் திறக்கும் கடிவாளம்

என்ருல் மூடிக்கொள்ளும் குதிரை' என்பார்கள். அப்படித் தான் இருக்கிறது. இத்தப் புத்தகக் காதலர் செய்கை.

புத்தகம் வாங்கிக் கொண்டு போனல் ஜாக்கி சதையாக வாசித்து விட்டுச் சிக்கிரம்.திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விடவேண்டாமோ? புத்தகத்தை அவர் வாசிக்கிருரா என்பதே சந்தேகம். ' அவள் நச்சுப் பொறுக்க வில்லே உங்களிடம் வந்தேன் ” என்று முதலிலேயே உண்மையை வெளியிடும் அன்பர்களும் சிலர் உண்டு. அந்த மனத்தெய்வங்களிடம் அவர்கள் அகப்பட்டுக் கொண்டு விழிப்பதை மாற்றப் புத்தகங் களைக் கொண்டுபோய்க் கொடுக்கிருர்கள். அவர்களுக்குப் பதிலாகப் புத்தகங்கள் அந்த மெல்லியலாரிடம் அகப் பட்டு விழிக்கின்றன ! х

என் புத்தகம் யார் வீட்டுக்காவது போய்த் திரும்பி வந்தால் அது பல வாசனையுடன் வரும், பலவகையான சுவடுகளும் சின்னங்களும் தாங்கி வரும். சிலசமயங், களில் கடைசி அட்டையில் வண்ணுன் கணக்கு இருக்கும். சில சமயங்களில் கடைசியில் உள்ள காகிதத்தில் எந்தக் குழந்தையாவது தன்னுடைய எழுத்துத் திறமையைக் காட்டியிருக்கும். . . . . . . .

ஒருநாள் என் புத்தகங்களில் ஒன்று, அட்டைமேல் ஒரே எண்ணெய்ச் சிக்காக என்னிடம் வந்து சேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/52&oldid=685959" இலிருந்து மீள்விக்கப்பட்டது