பக்கம்:சுதந்திரமா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடையாளம் х 45.

நண்பர் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது, ' என்ன இப்படி இருக்கிறது?" என்று கேட்டேன், "நம் வீட்டுக் குழந்தைகள் விஷமம் ஸார்” என்று சொல்லி அந்த விஷமத்தை நானும் ரசிப்பேனென்று கினைத்தாரோ, என்னவோ, ஹி, ஹி என்று இளித்தார். துப்பறிந்து விசாரிக்கப் போனல் உண்மை வெளியாயிற்று. அவருடைய தர்ம பத்தினி மூன்று நாள் அதைத் தலையணையாக வைத்துக் கொண்டு இன்புற்ருளென்று தெரிய வந்தது. - குழந்தைகள் உள்ள வீட்டுக்குப் புத்தகம் போய். விட்டு உருப்படியாக வருவதென்பது அரிது. அதுவும் இரண்டு குழந்தைகளின் போட்டிக் கிடையே அது அகப்பட்டால் யுத்த வீரனேப் போல் வடுவுடன்தான் வெளியேறும். பெண் குழந்தையின் மஞ்சள் கறை, குட்டிப் ப்ாப்பாவின் மை, அம்பியின் பென்ஸில் கோடு, மாமியின் அடுப்புக்கரி-இத்தனையும் என் புத்தகத்தில் புது அலங்காரங்களாக ஏறிவிடும். புத்தம் புதுப் புத்தக. மாகச் சென்றது திரும்பி வரும்போது பற்றற்ற சங்கியாசி போல,அட்டைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாமல் வரும். சில புத்தகங்களில் ஏடுகள் மூல மடங்கியிருக்கும். வாசித்தவர்கள் அடையாளம் வைத்ததன் சின்னம் அது. சில சமயங்களில் வாடின தாழம் பூ மடலொன்று இடை யிலே இருக்கும். அதுவும் வாசித்த அடையாளங்தான். ஏதா வது காகிதம் சிலசமயம் இருக்கும். ஒரு புத்தகத்தில் யாரோ கோணல் எழுத்திலே கிறுக்கின கடிதம் அடையாளமாக இருந்து என் கைக்கு வந்தது. யாராவது ஒருளுபாய் இரண்டு. ரூபாய் கோட்டுக்களே அடையாளமாக வைத்திருக்க மாட்டார்களா என்று பார்க்கிறேன். இதுவரையில் அப்படி ஒருவரும் செய்யவில்லை. - - ". . .

புத்தகம் வைத்துக் கொண்டு, கொடுக்க மாட்டேன் என்று சொல்வது பாவம் என்று அன்பர்களுக்குத் தார்ாள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/53&oldid=685960" இலிருந்து மீள்விக்கப்பட்டது