பக்கம்:சுதந்திரமா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சுதந்தரமா!

மாக் அவற்றைக் கொடுத்து உதவுகிறேன். அப்படிக் கொடுத்தால் கொஞ்சம் புண்ணியம் கிடைக்கட்டுமே என்று கூட கினேத்திருந்தேன். அந்த நினைப்புக்கு இனி இட மில்லே. காரணம் இதுதான். -

என் கண்பரொருவர் திருப்பிக் கொண்டு வந்து தந்த புத்தகத்தை ஒருநாள் பிரித்தேன். திருக்குறள் புத்தகம் அது கொல்லாமை என்ற அதிகாரத்தில் ஏதோ ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வரவில்லை. புத்தகத்தை எடுத்தேன். 'கொல்லாமை என்ற அதிகாரத்தைப் பிரித்துப் பார்த்தேன். தாக்கிவாளிப் போட்டது! அதி காரத்தில் பத்துப் பாட்டும் கொல்லாமையைப் பற்றிக் கூறின. கொல்லா உபதேசத்துக்கு அருகிலே அகியாயமாக ஒரு கொல கடந்திருந்தது. சிறிய விட்டில் பூச்சி ஒன்று கொல்லாமையதிகாரத்தில் தன் பிராணனை விட்டிருந்தது. நிச்சயமாக அது படித்தவர் வைத்த அடையாளமாக இருக்க நியாயம் இல்லை.

உலகத்தின் போக்குக்கு அந்தப் பூச்சி அடையாளமாக இருந்தது. கொல்லாமை உபதேசம் கடக்கும் இடத் திலேயே கொலையும் நடக்கிறது என்ற உண்மையை அந்தப் பூச்சி எனக்குத் தெரிவித்தது. - புத்தகம் கொடுக்காமல் மறுத்தால், இயல்வது கரவேல் என்ற பாட்டி மொழியை அலட்சியம் செய்த பாவம் நேரும். புத்தகத்தைக் கொடுத்தாலோ இத்தகைய உயிர்க்கொலைக்கு உடந்தையாக இருந்த பாவம் வந்து சேரும். இந்தத் தர்ம சங்கடத்துக்கு நான் என்ன செய்வ்ேன், ஈசுவரா! . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/54&oldid=685961" இலிருந்து மீள்விக்கப்பட்டது